கார்த்தியின் வா வாத்தியார் படத்திற்கு தொடரும் சிக்கல்.. தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

vaa vaathiyar 1

நளன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் வா வாத்தியார்.. இந்த படத்தின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.. இந்த படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால் திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் தாஸ் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ஞானவேல் ராஜா வாங்கிய கடனை செலுத்தாததால் இந்த படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.. ஞானவேல் ராஜா எப்போது கடனை செலுத்துவார் என்று பதிலளிக்கவும் உத்தரவிட்டது.


இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிமன்றம் பல முறை வாய்ப்பளித்தும் ஞானவேல் ராஜா கடனை திர்ப்பி அளிக்கவில்லை.. எனவே அவர் சொத்துகளை முடக்க வேண்டும் என்று மனுதாரர் வாதிட்டார்..

அப்போது ஞானவேல் ராஜா தரப்பு “ 24 மணி நேரத்தில் ரூ.3 கோடியை செலுத்துவதாகவும் மீதமுள்ள தொகைக்கு சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் வாதிட்டது.. மேலும் வா வாத்தியார் படத்தை தடை செய்தால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் எனவும் வாதிட்டார்..

இதை தொடர்ந்து நீதிபதிகள் “ ஞானவேல் ராஜாவுக்கு ஏற்கனவே நீதிமன்றம் பல முறை வாய்ப்பளித்துள்ளது.. எனவே மீண்டும் வாய்ப்பளிக்க தேவையில்லை. பணம் கொடுத்தவர் திரும்ப பெற நீண்டகாலம் காத்திருக்கிறார்.. ஞானவேல் ராஜா கடனை திருப்பி செலுத்த எந்த வித தீவிர முயற்சியும் மேற்கொள்ளவில்லை.. நீதிமன்றம் ஏற்கனவே போதுமான கால அவகாசம் அளித்துள்ளது.. அதனை ஞானவேல் ராஜா தவறாக பயன்படுத்தி உள்லார்.. எனவே ஞானவேல் ராஜா கடன் தொகையை ஞானவேல் ராஜா முழுமையாக செலுத்தும் வரை படத்தை வெளியிடக் கூடாது. அனைத்து தளங்களிலும் படத்தை வெளியிட அனுமதி இல்லை..” என்று உத்தரவிட்டனர்..

Read More : நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் பிளாக்பஸ்டர் ஹிட்டான ரஜினி படங்கள்.. மொத்த வசூல் ரூ.2,871 கோடி..!

RUPA

Next Post

98 அடி உயர சுனாமி, 1,99,000 பேர் இறக்கலாம்.. ஜப்பானின் மெகா நிலநடுக்க எச்சரிக்கை..! இந்தியாவுக்கு ஆபத்தா?

Wed Dec 10 , 2025
இந்த வாரம் ஜப்பானின் வட பசிபிக் கடற்கரையில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு, அதே பகுதியில் ஒரு வாரத்திற்குள் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆமோரி (Aomori) அருகே, கடலடியில் 54 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. சாலைகள் பிளந்தன, கட்டிடங்கள் சேதமடைந்தன, 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டோக்கியோ வரை (550 கிமீ […]
us earthquake tsunami warning 11zon

You May Like