கரூர் பெருந்துயர விவகாரத்தில் விஜய் செய்தது பித்தலாட்டம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார்.
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. ஆனால் இந்த சம்பவம் நடந்த உடனே விஜய் உட்பட தவெகவினர் அனைவரும் கரூரை விட்டு ஓடிவிட்டனர்.. இது கடும் விமர்சனங்களை கிளப்பியது.. விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடாததும் பேசு பொருளானது..
ஒரு வழியாக இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து பாதிக்கப்பட்ட மக்களை விஜய் மாமல்லபுரம் அழைத்து பேசினார்.. இதுவும் சர்ச்சையானது.. சமீபத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்திலும் விஜய் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் அரசை விமர்சித்தே பேசியிருந்தார்.. விஜய்யின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்..
இந்த நிலையில் கரூர் பெருந்துயர விவகாரத்தில் விஜய் செய்தது பித்தலாட்டம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார்.. மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று வைகோ தலைமையில் சென்னையில் நடைபெற்றது.. அப்போது கரூர் துயரம் தொடர்பாக விஜய்யை வைகோ காட்டமாக விமர்சித்துள்ளனர்..
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் விஜய் சென்னைக்கு ஓடி சென்றது ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.. கரூரில் 41 பேர் பலியான நிலையில் விஜய் ஏன் திருச்சியில் கூட தங்கவில்லை என்றும் வினவி உள்ளார்..
மேலும் “ கரூர் பெருந்துயரத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சென்னை அழைத்து வந்து துக்கம் கேட்டுள்ளார்… இது யாரும் செய்யாத பித்தலாட்டம் தனம்.. கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் அரசியல் பேச வேண்டாம். என கூறினார்.. ஆனால் விஜய் சகட்டு மேனிக்கு விஜய் பேசி உள்ளார்.. அவர் காகித கனவு உலகில் வாழ்வதாகவும் வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார்..
Read More : “யார் யார் கிளம்பி வராங்க.. திமுகவை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது..” முதல்வர் ஸ்டாலின் பேச்சு..



