கரூர் கூட்ட நெரிசல்: புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் மனு வாபஸ்.. தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்..!

bussy anad 1

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பிரச்சாம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழுவிடம், கரூர் டவுன் போலீஸார் மற்றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஆவணங்களை ஒப்படைத்தனர்.

இதனிடையே தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்திருந்தது. மீண்டும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற விரும்புவதாகக் கூறி ஐகோர்ட்டில் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் அவர் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில்  முன் ஜாமீன் மீதான மனுவை வாபஸ் பெறுவதாக அவர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்து தள்ளுபடி செய்துள்ளது.

Read more: டீ குடிக்கும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..!! பெரிய ஆபத்து..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

English Summary

Karur stampede: Bussy Anand bail plea withdrawn.. Chennai High Court dismisses it..!

Next Post

பிஞ்சு குழந்தையை மடியில் உட்கார வைத்து முதியவர் செய்த அசிங்கம்..!! மீட்க போராடிய சிறுவன்..!! அதிர்ச்சி வீடியோ..!!

Mon Oct 27 , 2025
குஜராத் மாநிலம் ஜாம்நகர் நகரில் உள்ள ஒரு கடைக்கு வெளியே சிறுமி ஒருவரிடம் முதியவர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருக்கத்தக்க சம்பவம், செப்டம்பர் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை சுமார் 4.30 மணியளவில் ஜாம்நகரின் அப்னா பஜார் பகுதியில் நடந்துள்ளது. அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுவன், சிறுமியை அருகில் அழைத்த முதியவர், அவர்களுடன் விளையாடுவது […]
Crime 2025 12

You May Like