கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித் சமீபத்தில் பேசியிருந்தார்.. நடந்த சம்பவத்திற்கு அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும் ஊடகங்களின் மனநிலை மாற வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.. இவ்வளவு மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் கூட்டம் கூட்டுவது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமில்லை என்றும் அவர் பேசியிருந்தார்.. இதையடுத்து அஜித் விஜய்க்கு ஆதரவளித்தாக விஜய் ரசிகர்களும், விஜய்யை விமர்சித்துள்ளார் என்று ஒரு தரப்பினரும் கூறி வந்தனர்..
இந்த நிலையில் நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசானது.. இது நீண்ட நாட்களாக நடக்க காத்திருந்த ஒரு விபத்து.. இதற்கு முன் ஆந்திர சினிமா தியேட்டரில் நடந்துள்ளது.. பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடந்துள்ளது.. நான் ஏற்கனவே சொன்னது போல பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள் நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும்.. எனது இந்த கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்படாது என்று நம்புகிறேன்..
ஒரு சில ஊடகங்களோ ரசிகர்கள் மீது பழியை சுமத்த விரும்புகின்றனர்.. ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.. என் தந்தை இறந்த போது அவரின் உடலை தூக்கி சென்ற போது ஒரு சில ஊடகங்கள் உயிரில்லாத அந்த உடலை வீடியோ காட்சிகளை பதிவு செய்ய முயற்சித்தனர்.. இதனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்கள் உயிரை பணயம் வைக்க வேண்டியிருந்தது. சில ஊடகங்களே இப்படி இருக்க ரசிகர்களையோ தொண்டர்களையோ குறை சொல்ல என்ன உரிமை இருக்கிறது..
ஏற்கனவே சொன்னது போல, நானும் குற்றத்திற்கு பொறுப்பானவன் தான்.. என்னிடமும் தவறுகள் உள்ளன.. ஓட்டளிப்பதை நான் ஒரு கடமையாக பார்க்கிறேன்.. மக்களும் அரசுகளும் ஒன்றுக்கொன்று பிணைந்ததாக இருக்க வேண்டும்.. மக்களின் உரிமைகளுக்கு அரசியல் கட்சிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் உள்ளனர்.. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் சில போலி சமூக ஆர்வலர்களும் உள்ளனர்.. இதுபோன்ற போலிகளிடம் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்..
எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்கும் சிலர் அமைதியாக இருக்க வேண்டும்.. என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன்.. வாழ்த்தி இருக்கிறேன்.. எல்லோரும் அவரவர் குடும்பங்களுடன் சந்தோஷமாக வாழ நான் வாழ்த்துகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்…



