கரூர் துயரம்.. இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு..

karur stampede 3

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெகவின் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் உரையாற்றினார்.. ஆனால் குறித்த நேரத்தை விட விஜய் மிகவும் காலதாமதமாக வந்ததால் காலை முதல் காத்திருந்த தொண்டர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர்.. விஜய் அப்பகுதிக்குள் நுழைந்த போதே பலர் மயங்கி விழுந்த நிலையில், அவர் கிளம்பிய பின்னர் கேட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி பலர் உயிரிழந்தனர்.. தற்போது வரை பலி எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.. மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..


இந்த சம்பவம் நடந்த உடனே அமைச்சர்கள் அங்கு விரைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.. மேலும் இந்த சம்பவம் குறித்து ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டார். அதன்படி நீதியரசர் அருணா ஜெகதீசன் கரூரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்..

கரூர் கூட்ட நெரிசலுக்கு திமுகவின் சதியே காரணம் என்றும் தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.. மேலும் அவசர அவசரமாக இரவில் பிரேத பரிசோதனை எழுப்பியது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பினர்.. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை நள்ளிரவில் நடந்தது குறித்து தமிழக அரசின் Fact Check தளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த பதிவில் “ ‘கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது’ என்று விதிமுறைகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

2021 நவம்பர் 15ம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்புரையில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் போதுமானது என்று இக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையிலும் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : Breaking : அரசியல் பலத்தை காட்ட விஜய் வேண்டுமென்றே தாமதமாக வந்தார்.. உயிர் சேதம் ஏற்படும் என எச்சரித்தும் கேட்கவில்லை.. FIR-ல் பகீர் தகவல்கள்..!

RUPA

Next Post

"ஐயா.. என் புருஷன காணோம்..!" போலீஸ் ஸ்டேஷனில் கதறி அழுத மனைவி.. கடைசியில் அம்பலமான பித்தலாட்டம்..!

Mon Sep 29 , 2025
"Sir.. I can't find my husband..!" The wife cried at the police station.. The madness finally exposed..!
Crime 2025

You May Like