உதயநிதி தகுதியானவர் தான்.. பாஜகவினரை வசைபாடிய கஸ்தூரி.!

தமிழக முதல்வரான மு க ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆளுநர் மாளிகையில் தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.


அவர் அமைச்சர் பதவி ஏற்றவுடன் அவருக்கு கருணாநிதி குடும்பத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும், திமுக தொண்டர்களும், நடிகர்களும், அமைச்சர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஆனால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்றதற்கு அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அதிமுக மற்றும் பாஜகவினர் உதயநிதி ஸ்டாலினை வாரிசு அரசியல் செய்கிறார் என்று குற்றம் சாட்டுவது வேடிக்கையாக இருப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கஸ்தூரி, “பாஜகவினர் வாரிசு அரசியல் என உதயநிதி ஸ்டாலினை திட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. உங்களது மகன், மருமகன்கள் மச்சான்கள் போல் இல்லாமல் தனது ஆற்றல் மிக்க பெற்றோரால் உதயநிதி பதவியும் வெற்றியும் பெற்றுள்ளார். உதயநிதி ஸ்டாலின் திறமையான தகுதியான அரசியல்வாதி தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவுக்கு அமைச்சராகும் உரிமை இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

#சென்னை: இறுதி சடங்கிற்கு சென்ற உறவினர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாப உயிரிழப்பு..!

Thu Dec 15 , 2022
சென்னை மாநகர பகுதியில் உள்ள கொத்திமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் ரவியின் மகனான  ராபின்(24) எனபவர் ஊர்க்காவல் துறையில் படை வீரராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர் நேற்று முன்தைய தினத்தில் ராபின் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  நீண்ட நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டதால் ராபின் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர். இவரின் […]
n4518338781671083872062242092ae762eb74892922f14d219009e27a7a75dfb191c50af675930cf9330bb

You May Like