குடை ரெடியா வச்சுக்கோங்க.. வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! – IMD கொடுத்த வார்னிங்

rain 1

தமிழகத்தில் வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஓட்டியுள்ள மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையி்ல தான் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த சுழற்சி உருவாகி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும், அதன்பின்னர் இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா, அதனை ஒட்டிய மேற்குவங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: பாமக-வில் மீண்டும் வெடிக்கும் மோதல்.. அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் பரபர புகார்..!! குழப்பத்தில் தொண்டர்கள்

English Summary

Keep your umbrellas ready.. A low pressure area has formed in the Bay of Bengal..!! – Warning given by IMD

Next Post

“எடப்பாடியார் குறிவைத்தால் அது தப்பாது.. நிச்சயமாக இது நடக்கும்..” வேட்டையன் ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்த ஆர்.பி. உதயகுமார்..

Thu Jul 24 , 2025
முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை வெளியே சொல்ல ஆள் இல்லை.. ஆனால் நெஞ்சுரத்தோடு எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம் என்ற பெயரில் திமுக அரசின் நிர்வாக திறனற்ற, சர்வாதிகார நடவடிக்கையை உண்மை தோலுரித்துக் காட்டும் ஒரே தலைவராக இருக்கிறார்.. அவர் செல்லும் இடங்கள் எல்லாம் மிகப்பெரிய […]
2001734 up 1

You May Like