திருமணத் தடைகள், குடும்ப ஒற்றுமையின்மை, நாகதோஷம், தீராத நோய்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கும் நவகிரகங்களில் இரட்டைக் கிரகங்களாகக் கருதப்படும் ராகு, கேதுவின் தாக்கம் ஒரு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இக்கிரகங்களை சமப்படுத்தும் பரிகார வழிபாடுகள், அதற்குரிய தலங்களில் நடைபெற்றால் மட்டுமே முழுப் பலனளிக்கும் என நம்பப்படுகிறது.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ள நாகநாதர் கோவில், நவகிரகங்களில் கேதுவுக்கு உரிய ஸ்தலமாக விளங்குகிறது. இத்தலம் நாயன்மார்கள் பாடல் பெற்ற வைப்புத்தலம் என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம்.
இத்தலத்தில் மூலவராக நாகநாதர் (சிவபெருமான்) காட்சி தருகிறார்.
கேது பகவானும், தன் பாவ பறைபட்ட பாம்பு உருவத்தில் நாகநாதரை வணங்கி தீர்வு பெற்றார் என்பதன் அடிப்படையில், கேதுவிற்கு பிரதான தலமாக இத்தலம் திகழ்கிறது. இங்கு கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு வழிபட்டால், திருமணத் தடைகள் அகலும், நாகதோஷம் நீங்கும், தம்பதியர் ஒற்றுமை மேம்படும், தொழில் மற்றும் வாழ்க்கை வளர்ச்சி பெறும்.
புராண கதைகளின்படி, பாற்கடல் கடையப்பட்ட போது வாசுகி பாம்பு பிளந்து விஷத்தை உமிழ்ந்ததும், அதன் பாவநிவாரணத்திற்காக சிவபெருமானை வேண்டி இத்தலத்தில் பூசை செய்தான். சிவன் அதனை நாகநாதராக அருள்பாலித்து இத்தலத்தில் தங்கியதாக புராணம் கூறுகிறது.
கோவிலின் கட்டிட சிறப்புகள்: தட்டையான ராஜகோபுரத்தை கொண்ட இக்கோவில் ஒற்றை பிரகாரத்தை கொண்டது. ஆரம்பத்தில் இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டதாகவும், பிறகு நாயக்கர்கள் காலத்தில் புனரமைத்து விரிவுபடுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. கோவிலுக்குள் சென்றதும் முதல் சன்னதியாக கேதுவிற்கு தனி சன்னதி உள்ளது.
கேது, மூலவரான நாகநாதரை வழிபட்ட நிலையில் காட்சி தருகிறார்.இத்தல விநாயகர், அனுகிரக விநாயகர் என அழைக்கப்படுகிறார். இக்கோவின் கருவறையும், கோபுரமும் கிழக்கு பார்த்த நிலையிலும், மற்ற நுழைவாயில்கள் அம்பாள் சன்னதியை நோக்கி தெற்கு பார்த்த படியும் அமைந்துள்ளன. அம்பாள், சுப்பிரமணியர், கஜலட்சுமி, பைரவர் ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது.
Read more: Flash: நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!! – தமிழ்நாடு அரசு உத்தரவு