மாணவர்கள் வீடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் உதவிப் பெட்டி திட்டத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது.
ஆழப்புழா அருகே வீட்டில், தந்தையும் அவரின் இரண்டாவது மனைவியும் துன்புறுத்துவதாக 9 வயது சிறுமி தனது நோட்டில் எழுதி இருந்ததை கண்ட பள்ளி ஆசிரியர், சிறுமியிடம் விசாரித்து பொழுது அச்சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கில் “உதவி பெட்டி” என்ற திட்டத்தை மாநில அரசு அறிவித்தது.
சிறுமியை நேரில் சந்தித்து உரையாடிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேரள உயர்கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி, “குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை எந்த சூழ்நிலையிலும் அரசு பொறுத்துக்கொள்ளாது. குழந்தைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும், உதவியும் வழங்கப்படும்” என்று வலியுறுத்தினார்.
செயல் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
* மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ‘உதவிப் பெட்டி’ நிறுவப்படும். மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை இதில் பதிவு செய்யலாம்.
* பெட்டியை வாரம் ஒருமுறை தலைமை ஆசிரியர் திறந்து, புகார்களை பொதுக் கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும்.
* ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் நடத்தை மாற்றங்களை கவனித்து பிரச்சினைகளை அடையாளம் காணும் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.
* டைரி எழுதுதல், பூஜ்ஜிய நேர அமர்வுகள் மூலம் குழந்தைகள் தங்கள் மனக்கவலைகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படும்.
* பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக நீதி, உள்ளூர் சுயாட்சி, சுகாதாரம், காவல்துறை உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து திட்டம் செயல்படும்.
* சிரமங்களை எதிர்கொள்ளும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்க பெற்றோர் மருத்துவமனைகள் வலுப்படுத்தப்படும்.
* பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான வீடுகள், சிறப்பு வசதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படும்.
Read more: உப்புக்கு பதில் சோடியம் புரோமைடு.. ChatGPT-யிடம் ஆலோசனை கேட்ட நபரின் பரிதாப நிலை..!!