பசங்க, கோலிசோடா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் கிஷோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை திருமணம் செய்தார்.
அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்ற சூழ்நிலையில், அவர்களுடைய வயது வித்தியாசம் தொடர்பாக சர்ச்சையும் எழுந்திருக்கிறது ப்ரீத்தி கிஷோரை விட 4 வயது மூத்தவர் ஆகவே இந்த விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.
இத்தகைய நிலையில், தற்சமயம் கிஷோர் மற்றும் பிரீத்தி ஜோடி வழங்கி இருக்கும் பேட்டியில் வயது தொடர்பாக பேசுபவர்களுக்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். வயது ஒரு நம்பர் அவ்வளவுதான் என்று ப்ரீத்தி கூறி இருக்கிறார். வயது வித்தியாசம் தொடர்பாக பேசுபவர்கள் அவர்களுக்கு இப்படி ஒரு பெண் கிடைத்திருந்தால் நிச்சயமாக அந்த கேள்வியை கேட்க மாட்டார்கள் என்று கிஷோர் தெரிவித்திருக்கிறார். மேலும் வயது வித்தியாசம் தொடர்பாக இரண்டு பேரின் குடும்பத்திலும் பிரச்சனை எழவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.