வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றது ’காஃபி வித் காதல்’!!

இயக்குனர் சுந்தர்சி இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ’காஃபி வித் காதல்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றது.

இப்படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ரெய்சா வில்சன், திவ்யதர்ஷினி, யோகிபாபு, ஸ்ரீகாந்த், சம்யுக்தா உள்பட பலர் இப்படித்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

ஏற்கனவே வெளியாகி இருக்க வேண்டிய திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படம் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் இப்படம் தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் எப்போது வெளிவரும் என்ற ஆர்வத்தில் காத்திருந்தனர். தற்போது அடுத்து வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக இயக்குனர் சுந்தர்.சி. பட்டாம்பூச்சி, அரண்மனை 3 , அரண்மனை 2, போன்ற திகில் படங்களாகவே எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் கூறுகையில் அழகான ’குட் ஃபீல்’ படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. அது தற்போது நிறைவேறி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தில் குடும்பக்கதையாகவும், சண்டை, காதல் , மோதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்து ஒரு அழகான தொகுப்பாக தயாராகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே எதிர்பார்த்ததை விட ரசிகர்களை திருப்தி படுத்தும் என சுந்தர்.சி தெரிவித்துள்ளார். யுவன்சங்கர் ராஜாவின் இசை திரைப்படத்தை இன்னும் மெருகேற்றி உள்ளது. இந்த திரைப்படத்தை ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட உள்ளது.

Next Post

’ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்படும் அதிகாரிகள்’ - அண்ணாமலை குற்றச்சாட்டு…

Sun Oct 30 , 2022
ஆட்சியாளர்களின் கைப்பாவையாக தமிழக அரசு அதிகாரிகள் செயல்படுவதாக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் பல அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று முத்துராமலிங்க தேவரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக பா.ஜ.க. அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’‘ முத்து […]
பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அண்ணாமலை..? புதிய தலைவர் இவர்தானாம்..!!

You May Like