கேடிஎம் நிறுவனம் புதிதாக என்ன பைக்கை வெளியிடப் போகிறோம் என்பதை புதிய டீஸர் புகைப்படம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக கேடிஎமின் தொடக்கநிலை மாடலாக 125 டியூக் இருந்தது. ஆனால் அதன் விற்பனையை நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தியது. தற்போது அதற்கு மாற்றாக, 200 டியூக் மாடலின் கீழ் பிளேஸ் செய்யப்படும் புதிய 160 டியூக் அறிமுகமாகவுள்ளது. தற்போது கேடிஎம் இந்தியாவில் 200 டியூக், 250 டியூக், 390 டியூக், 890 டியூக் R, 1390 சூப்பர் டியூக் R ஆகிய ஐந்து நேக்கட் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.
இவ்வரிசையில் சிறிய இன்ஜின் கொண்ட ஆறாவது டியூக் மாடலாக 160 டியூக் வெளியாகும். பைக்கின் அதிகாரப்பூர்வ வெளியீடு அடுத்த சில வாரங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவலின்படி, புதிய 160 டியூக் இரண்டாம் தலைமுறை 200 டியூக் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். மூன்றாம் தலைமுறை 200 டியூக் பிளாட்ஃபார்மை பயன்படுத்தினால் விலை அதிகரிக்கும் என்பதால், கேடிஎம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
200 டியூக் மாடலின் இன்ஜினை மறுவடிவமைத்து 160 டியூக்கில் பொருத்தவிருக்கிறது கேடிஎம். இந்த இன்ஜின் 19–20 hp பவரை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 150 சிசி பிரிவில் மிகவும் பவர்ஃபுல்லான இன்ஜினாக இது அமையும். புதிய கேடிஎம் 160 டியூக், சுமார் ரூ.1.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 150 சிசி பிரிவில் அதிக விலை கொண்ட பைக்காக இருக்கும், ஆனால் 200 சிசி மாடல்களுடன் போட்டியிடும் வகையிலான பெர்ஃபாமன்ஸ் மற்றும் திறனையும் வழங்கும்.
Read more: ஹோமியோபதி மருத்துவர்களுக்கு வேலை.. மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது..?