“ஊரோரம் புளியமரம்” பாடலை பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்..!

Paruthiveeran

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அமீர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கினார். அதேபோல இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.


மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. குறிப்பாக ஊரோரம் புளியமரம் பாடல் இந்த படத்தில் ஒரு ஹைலைட் பாடலாக அமைந்திருந்தது. அந்த பாடலை பாடிய நாட்டுப்புறப்பாடகி காரியாபட்டி லட்சுமி அம்மாள். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். கிராமிய பாடல்களை பாடி தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலம் ஆனார்.

இந்த நிலையில் 75 வயதான லட்சுமி அம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் மறைவால் அவரின் ரசிகர்கள், கிராமிய கலைஞர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர். இவர் கலைமாமணி விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more: சுரங்கப்பாதைக்குள் 2 ரயில்கள் மோதி விபத்து.. 70 தொழிலாளர்கள் காயம்.. உத்தரகாண்டில் சோகம்..!

English Summary

Lakshmi Ammal, the village singer who sang the song “Uroram Puliyamaram”, has passed away..!

Next Post

எஃகு உற்பத்தியாளர்களுக்கு நிம்மதி.. சீனாவில் இருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கும் இந்தியா!

Wed Dec 31 , 2025
சீனாவிலிருந்து இந்தியாவிற்கு அதிக அளவில், குறைந்த விலையில் எஃகு (Steel) பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்ளூர் எஃகு தொழில்துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில், இந்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சில குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீது 3 ஆண்டுகளுக்கு இறக்குமதி சுங்கவரி விதிக்கப்படுகிறது. இந்த சுங்கவரி முதல் ஆண்டில் 12 சதவீதமாக இருக்கும். இரண்டாம் ஆண்டில் இது 11.5 சதவீதமாக […]
india steel

You May Like