கொசுக்களை வானிலேயே குறிவைத்து அழிக்கும் லேசர் சாதனம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவுகிறது. இந்தியரின் இந்த கண்டுபிடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கொசுக்கள் நீண்ட காலமாக மனிதர்களுக்கு பெரும் தொல்லையாக இருந்து வருகின்றன, இதனால் பரவலான நோய்கள் மற்றும் இறப்புகள் கூட ஏற்படுகின்றன. கொசு தொல்லையில் இருந்து தப்பிக்க ஸ்ப்ரே, கொசு சுருள், மின்பேட் உள்ளிட்ட பல்வேறு வழிகளை பயன்படுத்துகிறோம். ஆனால் தற்போது, ஒரு இந்தியர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி “கொசுக்களை காற்றிலேயே குறிவைத்து சுடும் லேசர் சாதனம்” ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு பற்றிய வீடியோ, @tatvavaani என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோ வெளியாகிய இரண்டு நாள்களிலேயே 19 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பலரது கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
வீடியோவில், நீல நிறத்தில் ஒளிரும் ஒரு லேசர் கற்றை, காற்றில் பறக்கும் கொசுக்களை குறிவைத்து தாக்குகிறது. இது பாதுகாப்பு அமைப்புகள், எதிரி ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் முறையை நினைவூட்டுகிறது. இது S-400 ஏவுகணை அமைப்பைப் போலவே செயல்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த வீடியோக்கு கருத்து தெரிவித்த ஒரு பயனர், “மனிதருக்கும் கொசுக்களுக்கும் இடையில் ஒரு போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தார்” என்று கேலி செய்தார்.
மற்றொரு பயனர், சீனா கொசு ட்ரோன்களை உருவாக்கியது. அதற்கு போட்டியா இந்தியா கொசுவுக்கு எதிரான ஏவுகணையை உருவாக்கியுள்ளது என தெரிவித்தார். மேலும் ஒரு பயனர் “இந்திய அரசு இவரை ராஜாவைப் போல நடத்த வேண்டும்.. அவருக்கு கார், வீடு, பணம், விமானம், வேலையாட்கள்… எல்லாம் கொடுக்கவேண்டும்!” என புகழ்ந்தார்.
இந்த சாதனத்தை உருவாக்கிய நபருக்கு இஸ்ரோ வேலை வழங்கியதாக சமூக வலைதளங்களில் செய்து பரவுகிறது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இஸ்ரோ, இந்நாட்டின் தனியார் கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புதிய யோசனைகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: முன்னாள் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி.. திடீர் உடல்நலக்குறைவு..