Swiggy தனது ஆண்டு ‘How India Eats’ 2025 அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, இந்தியாவின் உணவு பழக்கங்களில் நடைபெறும் மாற்றங்களை விரிவாகச் சித்தரிக்கிறது. டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து, உணவுப் பரிமாணங்களில் மக்கள் துணிச்சலாக புதியவற்றை முயற்சி செய்யத் தொடங்கியுள்ளதால், நாட்டின் உணவுச்சேவை சந்தை பெரிய வளர்ச்சிக்கு தயாராகிறது.
இந்தியாவின் உணவுத் துறை வெகுவாக விரிவடைவதுடன், பல்வேறு தளங்களில் வேகமாக மாறி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதாவது, இரவு நேர உணவு ஆர்வம் அதிகரித்தல், ஆரோக்கியத்தை மையப்படுத்திய உணவு தேர்வுகள், பிராந்திய சுவைகளை கண்டுபிடிப்பது, உலக நாடுகளின் உணவுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன..
இந்தியாவின் உணவுச் சேவை சந்தை 2030க்குள் 125 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என்று இந்த அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால், ஒழுங்கமைக்கப்பட்ட (organised) உணவுச் சேவைத் துறை, ஒழுங்கற்ற (unorganised) சந்தையை விட இரட்டிப்பு வேகத்தில் வளர உள்ளது. இதனால், மொத்தத் துறையின் வளர்ச்சியில் 60% க்கும் மேற்பட்ட பங்கினை இந்த ஒழுங்கமைக்கப்பட்ட துறை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இந்தியாவின் உணவுச் சேவைத் துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.9% மட்டுமே பங்களிக்கிறது. இது சீனாவின் 5% மற்றும் பிரேசிலின் 6% உடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு.
ஆனால் இந்த வித்தியாசமே, இந்தியாவின் உணவுத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டுகிறது. Swiggy நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியர்களின் தினசரி உணவு பழக்கத்தை இரண்டு முக்கிய புதிய போக்குகள் மாற்றி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இரவு தாமதமான உணவு ஆர்டர்கள் அதிகரிப்பு
இரவு 11 மணிக்குப் பிறகு வரும் ஆர்டர்கள், சாதாரண இரவு உணவுக் கேட்டுக்களை விட மூன்று மடங்கு வேகத்தில் உயர்கின்றன. பீட்சா, கேக், குளிர்பானங்கள் போன்றவை இந்த நேரத்தின் மிகப் பிரபலமான விருப்பங்கள்.
ஆரோக்கிய உணவுகளின் தேவை உயர்வு
புரதம் நிறைந்த உணவுகள், கலோரி கண்காணிப்பு, குறைந்த சர்க்கரை உள்ள உணவுகள் போன்றவற்றின் தேவை காரணமாக, ஆரோக்கிய உணவு வகைகளில் 2.3 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு முரண்பட்ட போக்குகளும் “இரவு நேர உணவு ஆர்டர்” மற்றும் “ஆரோக்கியம் நோக்கிய உணவு” இந்தியர்களின் உணவு பழக்கத்தில் பெரிய மாற்றத்தை குறிக்கின்றன.
இந்தியாவின் பிராந்திய உணவுகளை மீண்டும் கண்டுபிடிக்கும் போக்கு
இந்தியர்கள் தங்களின் சொந்த பாரம்பரிய உணவுகளுக்கு மீண்டும் அதிக ஈர்ப்பு காண்பது என்பது முக்கிய மாற்றமாகும்.
மிகப் பிராந்திய (Hyper-regional) உணவுகளின் வேகமான வளர்ச்சி
கோவா, பீகார் போன்ற மாநிலங்களின் தனிப்பட்ட சமையல் வகைகள்
பிரபலமான பொதுவான உணவுகளை விட 2 முதல் 8 மடங்கு வேகமாக வளர்ந்து வருகின்றன.
பாரம்பரிய இந்திய பானங்கள் மீண்டும் எழுச்சி
மோர், சர்பத் போன்ற பாரம்பரிய பானங்கள், முழுப் பான பிரிவை விட 4–6 மடங்கு வேகமாக வளர்ச்சி கண்டுள்ளன.
தேநீர் மீண்டும் முன்னணி
அனைத்து பானங்களுடன் ஒப்பிடும்போது, தேநீர் ஆர்டர்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளன. சாலை ஓரத் தேநீர் குடிப்பதற்கான “பழமையான இடைவேளை” கூட இப்போது ஆன்லைன் மூலம் நடைபெறும் அளவுக்கு தேநீரின் பிரபலம் உயர்ந்துள்ளது.
இந்தப் போக்குகள் இந்தியர்கள் உலக உணவுகளை முயற்சி செய்வதோடு, தங்கள் சொந்த உள்ளூர் சுவைகளை மீண்டும் பெருமையுடன் அனுபவிக்கத் தொடங்கியிருப்பதை காட்டுகின்றன. இந்திய உணவுப் பயனர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய சுவைகளை முயற்சிக்கத் தொடங்கி உள்ளனர்.
புதிய உணவு வகைகளை முயற்சிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒரு வாடிக்கையாளருக்கு ஆர்டர் செய்யப்படும் தனித்துவமான சமையல் வகைகள் 20% உயர்ந்துள்ளன. வாடிக்கையாளர்கள் ஆய்வு செய்யும் உணவகங்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது. கொரியன், வியட்நாமீஸ், மெக்சிகன் உணவுகளை விரும்பும் இந்தியர்கள்
கொரியன் உணவுகள் – 17 மடங்கு வளர்ச்சி
வியட்நாமீஸ் உணவுகள் – 6 மடங்கு வளர்ச்சி
மெக்சிகன் உணவுகள் – 3.7 மடங்கு வளர்ச்சி
இந்த 3 சமையல் வகைகளும் இப்போது இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்யும் “பிரபலமான” உணவாக மாறிவிட்டன.
புதிய நுழைவுகள்: பெரு & எத்தியோப்பிய உணவுகள்
நகர்ப்புற வாடிக்கையாளர்கள் தற்போது பெருவியன், எத்தியோப்பிய உணவுகளையும் ஆர்வத்துடன் முயற்சிக்கின்றனர்.
தேநீர் வகைகளில் புதிய பற்று
டீ தேடல்கள் கடந்த 5 ஆண்டுகளில் 11 மடங்கு உயர்ந்துள்ளன. மாட்சா டீ தேடல்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளன.
இளைய தலைமுறையின் சுவை மாற்றம்
இன்றைய இளம் தலைமுறை, சுஷி, டாக்கோஸ், கொரியன் BBQ போன்றவை “விசேஷ சுவை” என்பதிலிருந்து வார நாட்களில் கூட ஆர்டர் செய்யப்படும் சாதாரண உணவுகளாக மாறிவிட்டன. புதிய சுவை விருப்பங்களுக்கேற்ப உணவகங்கள் தங்கள் செயல்திட்டங்களை மாற்றுகின்றன
இந்தியர்களின் உணவு பழக்கங்களில் வேகமான மாற்றம் நடைபெறும் நிலையில், உணவகங்கள் (Restaurants) புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி வருகின்றன. உணவகங்கள் தங்கள் மார்க்கெட்டிங் பட்ஜெட்டின் 75% க்கும் மேல் டிஜிட்டல் தளங்களில் செலவழிக்கின்றன. குறிப்பாக இளம் வாடிக்கையாளர்களை அடைவதற்காக இத்தகைய டிஜிட்டல் விளம்பரங்கள் அதிகரித்துள்ளன.
உணவக முன்பதிவு (Pre-booking) வேகமாக உயர்வு
உணவகத்தில் நேரடியாக சென்று அமர்வதைக் காட்டிலும், முன்பதிவு செய்வது 7 மடங்கு வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. வட இந்திய, இத்தாலியன் போன்ற பரிச்சயமான உணவுகளும், குறைந்த விலையில் வழங்கப்படுவதால் 10–40% வரை வளர்ச்சி காண்கின்றன.
உணவு டெலிவரி அனுபவத்திலும் மாற்றம்
உணவகங்கள், உணவை மட்டும் அல்லாது, “அன்பாக்சிங் அனுபவத்தையும்” மேம்படுத்த முயற்சிக்கின்றன.
Butterfly Burger Box — திறக்கும்போது தானாகவே ஒரு தட்டாக மாறும்.
Earthen Handi Delivery — மெதுவாக சமைத்த தம் பிரியாணி மண் பானையில் வந்தடையும். அழகாக வடிவமைக்கப்பட்ட பேக்கேஜ்கள், வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட அனுபவத்தை கொடுக்கின்றன.
Read More : இந்த காய்கறி குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. மலச்சிக்கலுக்கும் தீர்வு!



