வரும் அக்டோபர் 14-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என்று பேரவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார்..
சென்னை தலைமை செயலக பேரவை தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அப்பாவு “ வரும் அக்டோபர் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என அறிவித்தார். மேலும் “ கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பேரவையில் 8 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் 2025-26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கை அளிக்கப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..
அக்டோபர் 14-ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்..



