பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் தனது கட்சி அலுவலகத்தில் பெரியாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
1879-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்த பெரியார், தமிழ்நாட்டின் சமூக நீதி கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார்.. சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, பெண் கல்வி, சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு சிந்தனைகளுடன் தனது வாழ்நாள் முழுவது போராட்டங்களை நடத்தியவர்..
மக்களிடையே சமத்துவம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை மக்களிடையே கொண்டு சென்றார்.. சமூக நீதியில் அவர் ஏற்படுத்திய நீங்காத தாக்கத்தை திராவிட இயக்க ஆதரவாளர்கள் போற்றி வருகின்றனர்.. ஆனால் அதே நேரத்தில் சில மதக் கோட்பாடுகளுக்கு எதிரான பெரியாரின் கோட்பாடுகள் கடும் விமர்சனங்களை சந்தித்தன..
சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 52-வது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பெரியாரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்..
இந்த நிலையில் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் தனது கட்சி அலுவலகத்தில் பெரியாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.. இதுகுறித்து பதிவிட்டுள்ள விஜய்“ சமூக நீதியின் முன்னோடி, சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன். தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : விஜய்க்கு எதிராக பேசக்கூடாது.. பாஜகவினருக்கு பியூஷ் கோயல் அறிவுறுத்தல்..! இதுதான் காரணமாம்..!



