திருச்சியில் செயல்பட்டு வரும் இந்தியன் மேலாண்மை நிறுவனத்தில்(ஐஐஎம்) கற்றல் வளம்(Learning Resource) மையத்தால் வழங்கப்படும் நூலகர் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட விவரங்களை அறிந்து கொண்டு இணயதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: IIMT/LIB/TRA/2025/02
பணி: Library Trainee
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதந்தோறும் ரூ.23,000 சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு: 10.10.2025 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறையின்படி சலுகை வழங்கப்படும்.
தகுதி: நூலகம் மற்றும் தகவல் அறிவியல்(Library and Information Science)பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருந்தால் கூடுதல் முன்னுரிமை.
தேர்வு செய்யப்படும் முறை: திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, கணினியில் பணிபுரியும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சி 12 மாதங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iimtrichy.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.10.2025 ஆகும். எழுத்து மற்றும் நேர்முகத்தேர்விற்கு வரும்போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
Read more: பெரும் பதற்றம்! பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல் பலர் காயம்!