LIC நிறுவனத்தில் வேலை.. 841 காலியிடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க. உடனே விண்ணப்பிங்க..!!

LIC job

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) 2025ஆம் ஆண்டிற்கான உதவி நிர்வாக அலுவலர் (AAO) மற்றும் உதவி பொறியாளர் (AE) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


காலியிட விவரம்:

உதவி நிர்வாக அலுவலர் (பொது) – 350 இடங்கள்

கல்வித் தகுதி: பி.ஏ/ பி.எஸ்சி / பி.காம் போன்ற எந்தவொரு இளநிலைப் பட்டப்படிப்பு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உதவி நிர்வாக அலுவலர் (நிபுணத்துவம்) – 410 இடங்கள்

கல்வித் தகுதி: தொடர்புடைய துறைகளில் பி.இ/ சிறப்பு துறைகளுக்கான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி பொறியாளர் (Civil, Electrical) – 81 இடங்கள்

கல்வித் தகுதி: சிவில் அல்லது எலக்ட்ரிக்கல் துறைகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது மற்றும் அதிகபட்சம் 30 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 02.08.1995க்கு முன்பு பிறந்தவர்களும், 01.08.2004க்கு பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

வயது தளர்வு: SC, ST பிரிவினருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை தளர்வுகள் உண்டு. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC)க்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை தளர்வுகள் உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) தகுதி பெற்ற தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு (Main Examination)அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும். எஸ் சி, எஸ் டி பிரிவினர்க்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது? எல்.ஐ.சி-யில் AAO (Generalists/ Specialists/ Assistant Engineers) 2025 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணையதளம்: licindia.in

முகப்பு பக்கத்தில் உள்ள Careers (ஆட்தேர்வு) > Recruitment of AAO (Generalists/ Specialists/ Assistant Engineers) 2025 என்ற இணைப்பைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை தயாராக வைத்துக் கொண்டு, ஆன்லைன் விண்ணப்பத்தைச் சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.09.2025.

Read more: ‘காதலிப்பது குற்றமா?’ பாலியல் வன்கொடுமையையும் உண்மையான காதல் வழக்குகளையும் பிரித்து பார்க்க வேண்டும்.. உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்..

English Summary

LIC has released a recruitment notification for the posts of Assistant Administrative Officer (AAO) and Assistant Engineer (AE).

Next Post

இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!! உங்கள் வீடே பளிச்சென ஜொலிக்கும்..!! இல்லத்தரசிகளே சூப்பர் டிப்ஸ்..!!

Wed Aug 20 , 2025
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் டூத் பேஸ்ட். நம் பற்களை சுத்தம் செய்ய இதை தினமும் பயன்படுத்துகிறோம். ஆனால், இதன் பயன்பாடு அதைவிட அதிகம் என்பதை உங்களுக்குத் தெரியுமா..? டூத் பேஸ்ட் என்பது வெறும் பற்களை சுத்தம் செய்யும் பொருள் அல்ல. வீட்டில் உள்ள மற்ற பொருட்களையும் சுத்தம் செய்யலாம். புதிது போல ஜொலிக்கும் ஷூ : வழக்கமாக நாம் அணியும் ஷூவுக்கு மேல் தூசி, அழுக்கு […]
tooth paste

You May Like