அடுத்த 5 நாட்களுக்கு..!! தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..!! வானிலை மையம் புதிய ரிப்போர்ட்..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் மார்ச் 27ஆம் தேதி வரை தமிழகம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.


இதன் காரணமாகத்தான் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஓரிரு இடங்களில் இடம் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

கொரோனா ஆபத்து..!! 5 மடங்கு யுக்திகள் தேவை..!! அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு..!!

Thu Mar 23 , 2023
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பூசி மற்றும் கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா மாதிரி பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டில் மொத்தம் 220.65 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா முன்னெச்சரிக்கை […]

You May Like