அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறப்போகும் புதின்… அடுத்த அதிபர் யார்…?

ரஷ்ய அதிபர் புதின் ஓய்வு பெற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். 11 மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு முடிவடையவில்லை… ஆரம்பத்தில் ரஷ்யா வெகு வேகமாக முன்னேறி உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது. ஆனாலும் உக்ரைன் சரணடையாமல் நேட்டோ நாடுகளின் உதவியுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே ஏதோ போரை நிறுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில்.புதின் ஆற்றும் உரைகளை எழுதிக்கொடுக்கும் பொறுப்பிலிருந்தவரான Abbas Galloway என்பவர், புதின் தனது அதிபர் பதவியிலிருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என தெரிவித்துள்ளார்.  ஓய்வுக்குப் பின், கருங்கடலில் அமைந்திருக்கும், சகல வசதிகளுடன் கூடிய ரகசிய மாளிகையில் தனது கடைசிக்காலத்தை கழிக்க அதிபர் புதின் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒருவரை தனது வாரிசாக அறிவித்துவிட்டு ஓய்வு பெறுவார் என்றும் Abbas கூறியுள்ளார்.

Kokila

Next Post

ஒன்றாக பிறந்த இரட்டையர்கள்.. இறப்பிலும் ஒன்று சேர்ந்த வியப்பின் உச்சகட்ட சோகம்..! 

Sat Jan 14 , 2023
ராஜஸ்தான் மாநில பகுதியில் சேர்ந்த 26 வயது நிரம்பிய இரட்டைச் சகோதரர்கள் 900 கி.மீ. தொலைவில் வெவ்வேறு மாநிலத்தில் இருந்துள்ளனர். அப்போது ஒரே நேரத்தில் ஒன்று போல மரணத்தை அடைந்தது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  ஒரு நபர் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து பலியாக, ஒரு மணி நேரத்துக்குள் மற்றொருவர் கால் தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியாகியுள்ளார். இரட்டைச் சகோதரர்களான சுமேர், சோஹன் சிங் உடல்கள் மீட்கப்பட்டு […]

You May Like