நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த தம்பதியினரின் 16 வயது மகள், எட்டாம் வகுப்பு வரை மட்டும் படித்தார். படிப்பில் ஆர்வம் இல்லாததால் படிப்பைத் தொடராமல், திருப்பூரில் பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். அங்கு அருகிலுள்ள தனியார் நூல் மில் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிந்த 21 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பழக்கம் காதலாக மாறிய நிலையில், பாட்டி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி அந்த இளைஞனுடன் தனியாக வீடு எடுத்து சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சிறுமியை காதலித்த இளைஞன் ஏமாற்றிவிட்டு தப்பி சென்ற நிலையில், மீண்டும் சிறுமி குன்னூருக்கு வந்துள்ளார். சமீபத்தில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தான் சிறுமி எட்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
பிரசவ வலியால் சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்ட நிலையில், பெண் குழந்தை பிறந்தது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் குற்றவாளியான அந்த இளைஞன் துபாயில் தஞ்சம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குன்னூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க..! உணவு விஷம் ஏற்படும் அபாயம்..!



