Lok Sabha | விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்கும் பாஜக..? பிளான் போட்ட அண்ணாமலை..!!

மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜகவில் போட்டியிட மாவட்டச் செயலாளர் பாண்டுரங்கனின் அண்ணன் ஜவஹர், பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், டெல்லியில் பணியாற்றி வரும் டாக்டர் வேதா தாமோதரன் ஆகியோர் பெயர் தொடக்கத்தில் அடிபட்டது. கடும் போட்டி நிலவிவந்த நிலையில் போராசிரியர் ராம சீனிவாசன் திருச்சி தொகுதியில் களம் இறங்க உள்ளார்.

ஆனாலும், விருதுநகர் தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிடுவதா அல்லது கூட்டணிக்கு ஒதுக்குவதா என்ற குழப்பமான சூழ்நிலையும் நிலவி வந்தது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தமைக்காக ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படலாம் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சரத்குமார், கடந்த 12ம் தேதி சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து, வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம், பாடுபடுவோம் என்று கூறி இளைஞர்களின் வருங்கால நலனுக்காகவும் நன்மைக்காவும் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமாரை களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்த ராதிகா, தொலைக்காட்சி நாடகங்களிலும் நடத்து வருகிறார். ராடன் மீடியா என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் பெறுப்பு வகித்து வருகிறார். இதன் மூலம் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வருகிறார்.

ஓரிரு நாட்களில் பாஜக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும், அதில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார் களம் இறக்கப்படுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More : தேர்தல் வாக்குப்பதிவின்போது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!

Chella

Next Post

100 ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி உத்திரம், ஹோலி பண்டிகை நாளில் நிகழும் சந்திர கிரகணம்..!! இந்தியாவில் பார்க்க முடியுமா..?

Fri Mar 22 , 2024
இந்த ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் வருகிற மார்ச் 25ஆம் தேதி அதாவது பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை நாளில் நிகழப் போகிறது. வேத ஜோதிட சாஸ்திரப்படி, 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி பண்டிகை, பங்குனி உத்திரம் நாளில் சந்திர கிரகணம் நிகழ்வது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்த சந்திர கிரகணமானது காலை 10.23 மணிக்கு தொடங்கி மாலை 03.02 மணி வரை நீடிக்கும். […]

You May Like