மக்களவை தேர்தல்!… இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Special buses: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் வகையில், சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இன்றும் நாளையும் (ஏப்.18) சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Kokila

Next Post

ஏப்.,28 வரை இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான 5-வது கூட்டு ராணுவ பயிற்சி...!

Wed Apr 17 , 2024
இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான 5-வது கூட்டு ராணுவப் பயிற்சியான டஸ்ட்லிக்கில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவ அணியினர் புறப்பட்டுச் சென்றனர். இந்தப் பயிற்சியை 2024 ஏப்ரல் 28 வரை உஸ்பெகிஸ்தான் குடியரசின் டெர்மெஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டஸ்ட்லிக் பயிற்சி, இந்தியாவிலும் மற்றும் உஸ்பெகிஸ்தானிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்தர நிகழ்வாகும். முந்தையப் பயிற்சி 2023 பிப்ரவரி மாதம் பித்தோராகரில் (இந்தியா) நடத்தப்பட்டது. 60 வீரர்களைக் கொண்ட இந்திய அணியில் ராணுவத்தைச் சேர்ந்த 45 […]

You May Like