ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூலி படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. மேலும் சமீபத்தில் வெளியான கூலி படத்தின் ட்ரெயலரும் கவனம் ஈர்த்துள்ளது..
தனது படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.. ஆனால் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் தான் லோகேஷ் அறிமுகமாக இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த தகவலை லோகேஷ் கனகராஜே வெளியிட்டுள்ளார்… பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ நான் சுதா மேடமை இரண்டு முறை சந்தித்தேன், கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நான் தயாராக இருந்தேன், சிவகார்த்திகேயன் அதற்கு ஆதரவாக இருந்தார்.
இருப்பினும், கூலி படத்தை யை முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.. எனவே அந்த வாய்ப்பை மறுக்க வேண்டியிருந்தது. அந்த திட்டத்தை முடித்த பிறகு, நெருங்கிய நண்பரான அருணுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருந்தேன்” என்று கூறினார்.
ஜூன் மாதம், லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்காக தாய்லாந்தில் பயிற்சி பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அருண் மாதேஸ்வரனின் இந்த திட்டம் லோகேஷின் அறிமுக படத்தை குறிக்கிறது.. லோகேஷ் முன்னதாக ஸ்ருதி ஹாசன் நடித்த இனிமேல் பாடலில் நடித்திருந்தார்..
பராசக்தி
சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான பராசக்தி படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். சுதா கோங்கரா இயக்கத்தில் இந்த படம் மூலம் நடிகை ஸ்ரீ லீலாவின் தமிழ் திரையில் அறிமுகமாகிறார்.. இதில் அதர்வா முரளி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத படத்திற்கு, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளது, இருப்பினும் சரியான தேதி வெளியிடப்படவில்லை.
Read More : பிரபல இளம் நடிகர் மஞ்சள் காமாலையால் மரணம்.. சோகத்தில் திரையுலகம்.. பிரபலங்கள் இரங்கல்..