Election 2024 | தமிழகத்தில் ஆண்களை விட அதிக வாக்குகளை பதிவு செய்த பெண்கள்.!! வெளியான புள்ளி விவரம்.!!

Election: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் 18 வது பாராளுமன்ற தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பொது தேர்தலில் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

இதன் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 102 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான குளறுபடி கடந்த சில இடங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற பொது தேர்தல்(Election) வாக்குப்பதிவில் 2.12 கோடி ஆண்கள் வாக்களித்துள்ளனர். அதே வேலையில் தமிழகம் முழுவதும் 2.21 கோடி பெண்கள் வாக்களித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .

இதன் மூலம் எட்டு லட்சத்து 60 ஆயிரம் பெண்கள் ஆண்களை விட அதிகமாக வாக்களித்துள்ளனர் . கடந்த 2019 வருட பாராளுமன்றத் தேர்தலில் ஆண்கள் அதிகம் வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை வாக்களிப்பதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி இருக்கின்றனர். தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டை விட தற்போது குறைவான வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் பெண்கள் அதிகம் வாக்களித்திருப்பது சற்று ஆறுதலாக அமைந்திருக்கிறது.

Read More: இந்திய பெண்களுக்கு குட் நியூஸ்.!! AI தொழில்நுட்பத்தின் மூலம் மார்பக புற்றுநோய் கண்டறியும் வசதி.!!

Next Post

குட்நியூஸ்!… இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீடு பெறலாம்!… வயது வரம்பு நீக்கம்!

Mon Apr 22 , 2024
Health Insurance: மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் இனி அனைத்து வயதினரும் காப்பீடு பெற இயலும் என்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நீக்கியுள்ளது. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களுக்கான வயது வரம்பு 65 ஆக இருந்தது. அதற்கு மேற்பட்டவர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2024ம் […]

You May Like