இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்ற போது, நாட்டில் பல மன்னர்கள் இருந்தனர். அந்தத் தருணத்தில், அதிக தங்கம் வைத்திருந்த மன்னர் ஒருவர் இருந்தார். இவரே இந்தியாவின் மிகவும் பணக்கார மன்னர் என்று அரியப்படுகிறார். அவர்தான், ஹைதராபாத் நவாப் மிர்ஜா ஒஸ்மான் அலி கான். இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்று அழைக்கப்பட்ட ஹைதராபாத்தின் கடைசி நிசாமான மிர் உஸ்மான் அலிகான் சுதந்திர இந்தியாவின் முதல் பில்லியனராகவும், உலகின் பணக்கார நபராகவும் ஒரு காலத்தில் கருதப்பட்டார். மேலும் “அவரிடம் அந்தளவுக்கு அதிக முத்துகள் இருந்தன. அவர் விரும்பியிருந்தால், லண்டன் நகரின் பிக்கடிலி சர்க்கஸ் பகுதியின் அனைத்து நடைபாதைகளையும் அந்த முத்துகளால் முழுமையாக மூட முடிந்திருக்குமாம்.”
தங்கத்தால் நிரப்பப்பட்ட லாரிகள்: பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, மிர் உஸ்மான் அலி கானிடம் 100 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் (45359 டன்) தங்கம் இருந்தது. இது தவிர, சுமார் 400 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வைரங்கள், முத்துக்கள், மாணிக்கங்கள் மற்றும் பிற நகைகள் இருந்தன. பிரபல வரலாற்றாசிரியர்கள் டொமினிக் லாபியர் மற்றும் லாரி காலின்ஸ் ஆகியோர் தங்கள் “ஃப்ரீடம் அட் மிட்நைட்” என்ற புத்தகத்தில் ஹைதராபாத் நிஜாமிடம் அதிக தங்கம் இருந்ததாகவும், தங்க செங்கற்களால் நிரப்பப்பட்ட டஜன் கணக்கான லாரிகள் அவரது தோட்டத்தில் சேற்றில் நின்றதாகவும் எழுதியுள்ளனர். இந்த லாரிகளின் எடை காரணமாக, அவற்றின் சக்கரங்கள் மூழ்கின என்றும் கூறப்படுகிறது.
அரசிற்கு வழங்கப்பட்ட 425 கிலோ தங்கம்: 1965 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்தபோது, அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கினார் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இந்த நேரத்தில், அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தங்கத் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தில் நிஜாம் 4.25 லட்சம் கிராம் (425 கிலோ) தங்கத்தை முதலீடு செய்ததாகத் தகவல் உள்ளது. இது லால் பகதூர் சாஸ்திரியின் உரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1965 டிசம்பர் 11 ஆம் தேதியிட்ட தி இந்து செய்தியின்படி, லால் பகதூர் சாஸ்திரி ஹைதராபாத் வந்தபோது, நிஜாம் அவரை விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் அதே நாளில், லால் பகதூர் சாஸ்திரி ஒரு பேரணியில் உரையாற்றி, தேசிய பாதுகாப்பு தங்கத் திட்டத்தில் 4.25 லட்சம் கிராம் தங்கத்தை முதலீடு செய்ததற்காக நிஜாம் மிர் உஸ்மான் அலி கானை வாழ்த்தினார். தகவல்களின்படி, அந்த நேரத்தில் அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 50 லட்சம்.
இந்தியாவின் முதல் கோடீஸ்வரர்: நிஜாம் மிர் உஸ்மான் அலி கான் இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். 1911 ஆம் ஆண்டு தனது 25 வயதில் நிஜாமின் அரியணையை ஏற்றுக்கொண்ட உஸ்மான் அலி, அந்த நேரத்தில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீத செல்வத்தைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.