வாகனத்திற்கான மிக முக்கியமான ஆவணம் பதிவுச் சான்றிதழ் (RC Book). இது உங்கள் வாகனத்தின் உரிமைதனை நிரூபிக்கும் முதன்மையான ஆவணமாகும். ஆனால், இந்த ஆவணம் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன செய்வது என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலைக்கு தீர்வாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, RC நகல் (Duplicate RC) பெறுவதற்கான செயல்முறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால், நீங்கள் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க முன் செய்யவேண்டியவை:
1. அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து FIR நகல் பெற்று வைக்க வேண்டும்.
2. பின்வரும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும்:
- படிவம் 26 (Form 26)
- வாகன காப்பீட்டு பத்திரம்
- மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC)
- முகவரி சான்றுகள் (ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், மின்சார கட்டண ரசீது போன்றவை)
RC நகலுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க:
* Parivahan.gov.in இணையதளத்திற்குச் செல்லவும்.
* முகப்புப் பக்கத்தில் Online Services > Vehicle Related Services என்பதைத் தேர்வு செய்யவும்.
* உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* RC Services பட்டியில் இருந்து Duplicate RC என்பதை தேர்வுசெய்யவும்.
* Login/Register செய்யவும். (புதிய பயனராக இருந்தால் பதிவு செய்யவும்.)
* உங்கள் வாகனத்தின் Registration Number மற்றும் Chassis Number (கடைசி 5 இலக்கங்கள்) ஆகியவற்றை உள்ளிடவும்.
* Aadhaar e-KYC செயல்முறை மூலம் அடையாளம் உறுதி செய்யவும்.
* தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, ஆவணங்களை upload செய்யவும்.
* குறிப்பிட்ட கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
RTO அலுவலகத்தில் என்ன செய்ய வேண்டும்? ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, உங்கள் அருகிலுள்ள RTO அலுவலகத்தில் நேரில் செல்ல வேண்டியிருக்கிறது. அனைத்து ஆவணங்கள் மற்றும் பிரிண்ட் அவுட்களுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை சந்திக்க வேண்டும். ஆவணங்களைச் சரிபார்த்து, அங்கு வாகனத்தை ஆய்வு செய்த பிறகு, உங்கள் நகல் ஆர்சி சில நாட்களில் வழங்கப்படும். இந்த செயல்முறையை ஏற்றுக்கொள்வதன் மூலம், எந்த முகவரும் அல்லது இடைத்தரகரும் இல்லாமல் வீட்டிலிருந்தே ஆர்சி நகலை எளிதாகப் பெறலாம்.
Read more: OnlyFans ஆபாச தளத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்.. ரசிகர்கள் ஷாக்..!!