பள்ளி சீருடையில் பைக்கில் செய்யும் சேட்டைகள்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சாலையில் புதிய ஸ்டைலில் ​​மோட்டார் சைக்கிளில் காதல் ஜோடி ஒன்று செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், அவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட் ரோட்டில் காதல் ஜோடி ஒன்று புதிய மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது, ​​அவ்வழியாக கார் ஓட்டிச் சென்றவர், இவர்களிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். 

ஆனால் காதல் ஜோடி அவரது வார்த்தைகளை அலட்சியம் செய்து தங்கள் வேலையை மீண்டும் பார்த்துள்ளனர். காரில் இருந்த நபர், இவர்கள் செய்வதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். 

இந்த காட்சி வைரலானதை அடுத்து, விசாகப்பட்டினம் காவல்துறையின் கவனத்திற்கு வந்தது. எனவே இந்த காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காதலி பள்ளி சீருடையில் காதலனை இறுக்கி அணைத்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

#கன்னியாகுமரி: கணவரின் கண்முன்னே மனைவியை யானை மிதித்து கொன்ற கொடூர சம்பவம்..!

Sat Dec 31 , 2022
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள சித்தாறு அரசு ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் வெட்டும் பணிக்கு தொழிலாளர்கள் சென்றனர். அங்கே தோட்டத்துக்கு வந்த பெண் யானை, தொழிலாளர்களை பயமுறுத்தியது.  இதனால் தொழிலாளர்கள் பலரும் பல வழியில் ஓடிய நிலையில், யானை ஞானவதி (50) என்பவரை மட்டும் மிதித்தது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை தடுக்க வனத்துறையினர் ஏதாவது செய்திருக்க வேண்டும் என தொழிலாளர்கள் சிலர் […]
n45721082216724680176121311bd1cc1171e2951efa2cdf030ab5267a0360df06f524e2e13b978755c1800

You May Like