உத்தரப்பிரதேசம் லக்னோவில் மனிதாபிமானமே மாய்ந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்னோவின் கோமதி நகரின் பத்ரகர்புரம் பகுதியில், 24 வயதான சோனு விஸ்வகர்மா என்ற இளைஞர், தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அருவருப்பான செயலை அந்த இளைஞனின் நண்பன் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதும், அது வேகமாக வைரலாகி பரவியது. இதையடுத்து பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆஸ்ரா த ஹெல்பிங் ஹேண்ட்ஸ் என்ற விலங்கு நல அமைப்பு இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தது.
புகாரின் பேரில் போலீசார் விரைவாக சோனு விஸ்வகர்மாவை கைது செய்தனர். விசாரணையில், சம்பவம் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடந்தது என்றும், குற்றவாளி தெரு நாய்களுக்கு உணவளிப்பது போல் அருகில் சென்று தெரு நாய்களின் அருகே சில நேரம் சுற்றித்திரிந்த பின், ஒரு நாயை உணவுடன் கவர்ந்து வன்கொடுமை செய்தது உறுதியானது. அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்யவே அவன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தற்போது, விலங்கு கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மற்றொரு சம்பவத்தில், மும்பையின் கண்டிவலி பகுதியில், ஒரு பாதுகாப்பு காவலர் குச்சியுடன் நாயைத் துரத்தியதில், பயந்துபோன நாய் 15வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தது. சிசிடிவி காட்சிகளின்படி, நாய் தங்குமிடம் தேடி கட்டிடத்துக்குள் நுழைந்து நேராக 15வது மாடிக்கு ஏறியது. அங்கு பாதுகாப்பான இடம் கிடைக்காமல், பீதியில் ஜன்னல் அருகே இருந்த பெட்டியின் மேல் ஏறி ஒளிய முயன்றது.
ஆனால் காவலர் தொடர்ந்து குச்சியால் அடித்துக்கொண்டிருந்ததால், நாய் பயந்து ஜன்னலுக்கு வெளியே குதித்தது. அதில் அது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த கொடூரச் சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளுக்கு எதிரான இத்தகைய வன்முறைக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Read more: தொழில் முனைவோராக வேண்டுமா…? தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி..! உடனே விண்ணப்பிக்கவும்…!