INDIAN 2 | ‘மீண்டும் வருகிறார் இந்தியன் தாத்தா’… தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லைக்கா வெளியிட்ட மாஸ் அப்டேட்.!!

INDIAN 2: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லைக்கா நிறுவனம் உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியன் 2(INDIAN 2) திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. கொரோனா பெருந் தொற்று மற்றும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து போன்ற காரணங்களால் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசன் சமுத்திரக்கனி சித்தார்த் காஜல் அகர்வால் பிரியா பவானி சங்கர் ராகுல் பிரீத் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறது .

மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரைப்படத்தின் புதிய போஸ்டரை லைக்கா நிறுவனம் தனது X தளத்தில் வெளியிட்டது. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் போஸ்டர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே வைரலாகி இருக்கிறது.

Read More: CANADA | 24 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொலை.!! காரில் நடந்தேறிய கொடூரம்.!! குடும்பத்தார் உருக்கமான வேண்டுகோள்.!!

Next Post

Non veg : குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய அசைவ உணவுகள்…!

Sun Apr 14 , 2024
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அசைவ உணவுகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் மிகவும் கவனமாக இருப்போம். அதிலும் அசைவம் என்று வந்துவிட்டால் என்ன மாதிரியான உணவு கொடுப்பது என்று குழப்பத்தில் இருப்போம். அசைவ உணவுகளான சிக்கன்,மட்டன்,மீன் ஆகியவற்றில் அதிகமான புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளதால்,இவை மிகவும் ஏற்றவையாகும். சிக்கன்: சிக்கனில் அதிகளவில் புரதம் நிறைந்துள்ளது. குழந்தைகள் வலுவாகவும், உயரமாகவும் வளருவதற்கு தேவையான அமினோ […]

You May Like