பெண் வழக்கறிஞரின் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை 48 மணி நேரத்திற்குள் இணையத்திலிருந்து நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டக் கல்லூரியில் படித்த போது, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த காதலனுடன் மாணவி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படிப்பை முடித்து நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் அந்த பெண்ணின் வீடியோ ஒன்று இணையதளங்களிலும், ஆபாச வலைதளங்களிலும் வைரலானது.
இந்த வீடியோக்களை முடக்கி, இணையதளத்தில் இருந்து நீக்கவும், எதிர்காலத்தில் அந்த வீடியோ பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் மத்திய அரசுக்கு புகார் மனு அளித்துள்ளார். மத்திய அரசுக்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அந்த காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட அவர் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ” குடிமக்கள் அனைவரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை.
இதுபோன்ற வழக்குகளில் தமிழக காவல் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ” என டிஜிபிக்கு உத்தரவிட்டநிலையில், 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கை தாக்கல் செய்வதற்காக, வழக்கு விசாரணையை ஜூலை 14ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
அந்த பெண்ணை நேரில் சந்தித்து தைரியம் அளிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, “இந்த பெண் வழக்கறிஞர் என் மகளாக இருந்திருந்தால் எனக்கு எப்படி இருந்திருக்கும் என யோசித்து கொண்டிருக்கிறேன். கண் கலங்க கூடாது என கண்ணீர் கலந்த குரலுடன் ஆறுதல் கூறினார்.
Read more: அது என்ன Fake Wedding..? இந்தியாவில் வைரலாகும் இந்த பார்ட்டி ட்ரெண்ட் பற்றி தெரியுமா?