மதுரை ஆதீனத்திடம் இன்று விசாரணை…! பாஜகவின் மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவிட்ட நயினார் நாகேந்திரன்…!

aadheenam 2025

விசாரணை என்ற பெயரில் மதுரை ஆதீனத்தை தமிழ்நாடு காவல்துறையை வைத்து திமுக தொந்தரவு செய்து வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக காவல்துறை இன்று மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. தொடர்ந்து மத குருமார்களையும், ஆன்மீகப் பெரியோர்களையும் பல சொல்ல முடியாத இன்னல்களுக்கு உட்படுத்தி வருகிறது இந்தத் திமுக அரசு. திமுக ஆட்சியில் எந்தவொரு தனி மனிதனைப் போலவே, மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருகிறது. தற்போது விசாரணை என்ற பெயரில் மதுரை ஆதீனத்தையும் தொந்தரவு செய்து வருகிறார்கள் தமிழ்நாடு காவல்துறையை வைத்து.

70 வயதைக் கடந்த போற்றுதலுக்குரிய மதுரை ஆதீனம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உடல்நலம் குன்றியுள்ள நிலையில் இரண்டு நாட்கள் முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சற்று குணமடைந்து திரும்பியுள்ளார். அதுவும் இந்த ஞாயிற்றுக்கிழமை நாளில் கூட விசாரணை நடத்தத் தேடி வருவதெல்லாம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்த அரசு ஆன்மீக விவகாரத்தில் செய்யும் அத்துமீறல்களையும், இந்து விரோத செயல்களையும் தட்டிக்கேட்கும் சமயப்பெரியவர்களுக்குத் தொடர்ச்சியாக ஏதாவதொரு மன அழுத்தத்தை இந்த அரசு கொடுத்து வருகிறது என்பதைப் பார்க்கிறோம். ஆகவே, இனியும் காவல்துறையின் அத்துமீறல்களை எல்லாம் தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது, காவல் துறையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையில் தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மதுரை ஆதீனத்தின் பக்கபலமாக இன்று அங்கே இருப்பார்கள். இன்று நாகூரில் நடைபெறவிருக்கும் விவசாய பெருமக்களுக்கு ஆதரவான போராட்டத்தை முடித்துக்கொண்டு நானும் அங்கே செல்லவிருக்கிறேன். ஞானசம்பந்தர் காலம் முதல் புகழோடும், கீர்த்தியோடும் விளங்கி வரும் மதுரை ஆதீனத்தின் மாண்பைக் காக்க என்றும் தமிழக பாஜக துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

Read more: பிறக்கும் குழந்தைகள் வெள்ளையாக இருந்தால் மரண தண்டனை.. வினோத வழக்கம் கொண்ட பழங்குடி மக்கள்..!!

Vignesh

Next Post

இடஒதுக்கீடு கோரி இன்று பாமக சார்பில் மாபெரும் போராட்டம்… தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு…!

Sun Jul 20 , 2025
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் இன்று பாமக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்குமாறு தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான திமுக அரசு, இன்னும் இரு மைல்கல்களை கடந்திருக்கிறது. முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1200 நாள்களாகும் […]
13507948 anbumani 1

You May Like