மோடி பிறந்தநாள் – மினிமாரத்தான் போட்டி நடத்த அனுமதி … தூத்துக்குடி இளைஞர் தொடர்ந்த வழக்கில் மதுரை நீதிமன்றம் தீர்ப்பு …

பிரதமரின் பிறந்த நாளன்று தூத்துக்குடியில் நிபந்தனைகளுடன் மினிமாரத்தான் போட்டி நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி சக்தி குமார் அமர்வு விசாரித்தது. பிரதமரின் பிறந்தநாளன்று மினி மாரத்தான் போட்டி நடத்திக் கொள்ளலாம். சில நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தனர். மாரத்தானில் பங்கேற்பவர்கள் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னம் , தலைவர்களின் படங்கள் இடம்பெறக்கூடாது. சாதி சமூகம் மற்றும் மதத்துக்கு ஆதரவாகவோ எதிராகவோ முழக்கமிடக்கூடாது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அசம்பவாவிதம் ஏற்படாமல் இருப்பதை மனு தாரர் உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். பங்கேற்பவர்களின் உடைகளில் வகுப்பு வாதம் , அரசியல் தலைவர்களின் மனதை புண்படும் வாசகங்கள் அல்லது படங்கள் இருக்கக்கூடாது.  குறிப்பிட்ட சமூகம் அல்லது தலைவரை சித்தரித்து பிளக்ஸ் போர்டுகள் மாரத்தான் போட்டியின் போது வைக்கக்கூடாது. என்ற நிபந்தனைகளை விதித்து  மினி மாரத்தான் போட்டிக்கு அனுமதி அளித்து அனுமதி வழங்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

குதிரை,மாடுகள் தான் ஓடக்கூடாது !

நேற்று நெல்லையைச் சேர்ந்த நபர் ஒருவர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி ரேக்ளா, குதிரை பந்தயம் , காளைகள் பந்தயம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை .. பிறந்த நாள் என்றால் இனிப்புகள் வழங்குவது நலத்திட்டங்கள் செய்வது போன்றவற்றை செய்யலாம் , ரேக்ளாதான் நடத்த வேண்டும் என்பதில்லை என கூறி அனுமதி மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Next Post

மின் கட்டண மானியம் ரத்து … அரவிந்த் கெஜ்ரிவால் புதிய அறிவிப்பு ….

Wed Sep 14 , 2022
டெல்லியில் இதுவரை மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மின் கட்டணத்தில் மானியம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் , ’’டெல்லி அரசு கடந்த 2015ம் ஆண்டு முதல் மக்களுக்கு மானியம் வழங்கி வருகின்றது. வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த மானியம் ரத்து செய்யப்படுகின்றது. ஆனால் , மானியம் வேண்டும் என நினைப்பவர்கள்  மானியத்திற்காக முன்பதிவு செய்ய வேண்டும். யாருக்கு மானியம் […]

You May Like