கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் அரசு இதுவரை 30,000 கோடியை அரசு செலவிட்டுள்ளது. 2023 செப்.15 முதல் தற்போது வரை, பயனாளிகள் தலா 26,000 ரூபாய் பெற்றுள்ளனர். அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தமிழகத்தில் விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.
புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் தகுதியானோரின் பட்டியலை தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இதனிடையே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் 1000 ரூபாய் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி அண்மையில் அறிவித்திருந்தார்.
தொடர்ந்து கிராம வாரியாக பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் இறுதி செய்ய தொடங்கினர். விவரங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் புதிதாக இணைந்துள்ளவர்களின் வங்கி கணக்கில் 1 ரூபாய் அனுப்பி பரிசோதிக்கும் நடைமுறையை அரசு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more: புயல் சின்னம்.. இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில்?



