மகிழ்ச்சி..! மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.. கூடுதலாக மூன்று விதிவிலக்கு…! தமிழக அரசு அரசாணை

magalir thoga3 1694054771 down 1750124150 1

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதலாக மூன்று விதிவிலக்குகளை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்ப பெண்களும், பிற ஓய்வூதத் திட்டங்களை ஓய்வூதியம் பெறுவோரும் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு உத்தரவு.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதலாக மூன்று விதிவிலக்குகளை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன். கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம்/தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர. அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினைத் தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் 19,487 முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளிடப்பட்டன. மாநிலம் முழுவதும் இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள் நடத்துவது குறித்து 19.06.2025 அன்று தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், மேலும் பெண்கள் பயனடைய ஏதுவாக, ஏற்கனவே உள்ள விதிவிலக்குகளுடன் மேலும் சில விதிவிலக்குகள் வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Vignesh

Next Post

INDW VS ENGW T20|ஸ்மிருதி மந்தனா அதிரடி சதம்!. 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி!.

Sun Jun 29 , 2025
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. டி20 தொடரின் முதல் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 210 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக பேட்டிங் செய்து ஷெஃபாலி வர்மாவுடன் இணைந்து 77 ரன்கள் எடுத்தார்.ஷெஃபாலி வர்மா வெறும் 20 ரன்கள் […]
INDW VS ENGW T20 11zon

You May Like