சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாக வளம்வந்து கொண்டிருப்பவர் நடிகை மகாலட்சுமி – ரவீந்தர் தம்பதி திருமணமான சில வாரங்களிலேயே எப்படிஎல்லாம் மிரட்டி வச்சுருக்காருன்னு பாருங்க!
நடிகை மகாலட்சுமி ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சற்று சலசலப்பான விமர்சனங்களை ஆரம்பத்தில் கொடுத்தாலும் நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கின்றோம் என்பதை பல நிகழ்வுகளில் கூறியுள்ளனர். அனைவரின் விமர்சனங்களுக்கும் பொறுமையாக பதில் அளித்து திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் போட்டோ ஷூட் என அசத்தினர்.
ஏற்கனவே பல சீசன்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெவியூ செய்திருக்கின்றார் ரவீந்தர். ஆனால்அந்த சீசன் தொடங்கி ரெவியூ வரவில்லையே என ரசிகர்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். இதனால் அவர் பிக்பாஸ் சீசன் 6க்கான ரெவியூ அப்டேட்குறித்த தகவலை அவர் வெளியிட்டபோது குறுக்கிட்ட மகாலட்சுமி .. பிக்பாஸ் அதெல்லாம் ரெவியூ பண்ணக்கூடாது என ஒரே பேச்சாக தெரிவித்துவிட்டார். சரிங்க மேடம் பண்ணலிங்க மேடம் , எல்லாம் எனக்குஇருக்க 10 ஃபேன்ஸ்காக மேடம் என அடங்கிப்போனார்… ஒழுங்கா அன்பே வா சீரியல ரெவி பண்ணுங்க என கூறியதும் , என்னது அன்பே வாவா என இழுத்து… சரிங்க மேடம் என்றார். தான் கையில் வைத்திருந்த கட்டையை காட்டி மிரட்டியதும் அடங்கிப்போனார். பின்னர் இதென்ன ஃப்ரிட்ஜ்ல ஒரு ஸ்னாக்ஸ் வெக்க முடியல ஹாஸ்பிடல்ல இருந்து வந்த கையோட இப்படியா? என அதற்கும் ஒரு திட்டு … அதே நேரத்தில் தான் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்ததாகவும் இதனால் ரெவியு கொடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார். அது, என இடத்தை விட்டு மகாலட்சுமி சென்றதும் ’போய்ருச்சு ’ என கூறி அப்பாடா என பெருமூச்சுவிட்டார் . இனி தொடர்ந்து ரெவியூ கொடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது