“ மம்தா சமநிலையை இழந்து பேசுகிறார்..” திமுக, காங்கிரஸ் குறித்த கருத்துக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்..!

mamtha manickam tagore

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. கேரளா, அசாம், புதுச்சேரியில் நாளை மறு நாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது..


தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.. இந்த சூழலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்..

அதன்படி நேற்று நாடியா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் “ முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பாஜக உடன் மறைமுகமாக ரகசிய உடன்பாடு வைத்துள்ளனர் என்று குற்றம்சாட்டினார்..

மேலும் “ தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தை சேர்ந்த 500-க்கு மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாட்டுக்கு தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பி உள்ளது.. முக்கிய குற்றவாளிகளை கைது செய்து திறமையான அதிகாரிகள் திட்டமிட்டு தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்..” என்றும் அவர் சாடினார்..

இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மம்தா பானர்ஜி அவர்களின் சமீபத்திய கருத்து மிகவும் பொறுப்பற்றதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும். பாஜக எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டிய இந்த நேரத்தில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மட்டுமே பலவீனப்படுத்தும்.

எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைப்பது, மம்தா
அவர்கள் சமநிலையை இழந்து பேசுவதைப் போல தோன்றுகிறது. 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் அல்ல, திரிணாமூல் காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததும், 2004 தேர்தலில் RSS-பாஜக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டதும் மறக்கக் கூடாது.

உண்மைகள் இல்லாமல் கூட்டணி கூட்டாளிகளை குறிவைத்து, அமைப்புகளின் மீது சந்தேகம் எழுப்புவது தலைமைத் தன்மையல்ல — அது கவனச் சிதறலாகும்.

எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தொடர்ந்து RSS-பாஜக கொள்கைக்கு எதிராக நின்று போராடி வருகிறார். அவர்மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன; அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்; அவரது அரசு வீடும் காலி செய்யப்பட்டது RSS/ BJP எதிர்த்து நிற்பதற்கு அவர் செலுத்திய விலை இது.

பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு யாரிடமும் பாடம் தேவையில்லை. இது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளுக்கான நேரமல்ல. இது ஒற்றுமை, பொறுப்பு, மற்றும் நோக்கத்தில் தெளிவு கொண்டிருக்க வேண்டிய நேரம்.” என்று பதிவிட்டுள்ளார்..

Read More : “தம்பி அந்த கொடிய கீழ இறக்கு பா.. சொன்னா கேளு..!” பாமக கொடியால் டென்ஷன் ஆன எடப்பாடி..!

RUPA

Next Post

Vastu Tips: கோவிலுக்கு அருகில் வீடு கட்டலாமா..? வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது..?

Tue Apr 7 , 2026
Vastu Tips: Can we build a house near a temple..? What does Vastu Shastra say..?
vastu tips for temple near home 1738221131816 1

You May Like