கரையை கடந்தது மாண்டஸ் புயல் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்ட தகவல்!

வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக உருபெற்றது. இந்த புயல் சின்னத்திற்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டது.


இந்த புயல் சின்னம் காரணமாக, தலைநகர் சென்னையில் கனமழையின் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தனர். அதோடு மின்கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் உள்ளிட்டவை வெகுவாக பாதிக்கப்பட்டனர். கோவளம் கடற்கரை பகுதியில் இருந்த கடைகள் காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் சின்னாப்பின்னமாகி போயின.

இந்த புயல் சின்னம் காரணமாக, செய்த மழையின் அளவு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 142 செண்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. நள்ளிரவு 12 மணி அளவில் பத்திரிகையாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அதிகபட்ச மழை தொடர்பான தகவலை தெரிவித்து இருக்கிறார்.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் 142 மில்லி மீட்டரும், சென்னை, நுங்கம்பாக்கத்தில் 106 மில்லி மீட்டர் மழையும், பதிவானதாக கூறியிருக்கிறார். மீனம்பாக்கத்தில் 103 மில்லி மீட்டர், மாதவரத்தில் 87மில்லி மீட்டரும், திருவள்ளூரில் 83 மில்லி மீட்டர் மழை பதிவானதாக தெரிவித்திருக்கிறார். அதோடு சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக அவர் கூறியிருக்கிறார்.

Next Post

#திண்டுக்கல் :சகோதரர்களே சொத்துக்காக அண்ணனை கொன்ற சம்பவம்..!

Sat Dec 10 , 2022
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள முத்தழகுப்பட்டியில் தர்மராஜ் என்பவர் லோடுமேனாக பணிபுரிந்து வருகிற மகன் ராஜ்குமாருடன்(32) வசித்து வருகிறார். சென்ற 2017 ஜூன் மாதம் ராஜ்குமார் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.  இதன் காரணமாக காவல் நிலையத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ராஜ்குமாரை சொத்து தகராறில் முத்தழகுபட்டியை சேர்ந்த இவரின் சகோதரர்களான சுரேஷ் அந்தோணி(36), தாமஸ் செல்வம்(40), உள்ளிட்ட 4 பேர் […]
n450446912167065265337405f972eaeb459594d5549de4be7b8e30ee155b271142f5a3ef215ef2848e5c7b

You May Like