தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை… ரூ.10 லட்சம் பரிசு + விருது…! மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!

manja pai 2025

2025 – 2026 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால் 2022-2023 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின் படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB), ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும். வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன் மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.

விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் (https://dharmapuri.nic.in/) மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளம் https://tnpcb.gov.in/ ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர்/அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும் மற்றும் விண்ணப்பங்களின் மென் நகலுடன் (CD or Pendrive), இரண்டு அச்சுப் பிரதிகள் (கடின நகல்) 15.01.2026 வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று MLA பதவியை ராஜினாமா செய்கிறார் செங்கோட்டையன்..? சென்னை விரைந்த ஆதரவாளர்கள்..!! நாளை தவெகவில் இணைப்பு..?

Wed Nov 26 , 2025
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையனின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் அரசியல் களத்தில் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இவர் டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோரை சந்தித்ததை தொடர்ந்து, இ.பி.எஸ். அவரை மொத்தமாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதன் பின்னணியில் செங்கோட்டையன் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பது […]
Vijay Sengottaiyan 2025

You May Like