இந்தியா உலகின் பண்பாட்டு பன்முகத்தன்மைக்காக பெயர் பெற்ற நாடு. ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களுக்கென தனித்துவமான வழக்கங்கள், மரபுகள், நம்பிக்கைகள் உண்டு. அதில் சில பழங்குடி மக்கள் பின்பற்றும் பாரம்பரியங்கள், நவீன சமூகத்தின் பார்வையில் வியப்பூட்டக்கூடியவையாகும். சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா (Murya) பழங்குடியினர் பின்பற்றும் “Ghotul” எனும் பாரம்பரியம், இதற்கொரு பிரமிப்பூட்டும் எடுத்துக்காட்டு.
இங்கு, திருமணத்திற்கு முன் ஆண்–பெண் உறவுக்கு சமூக அங்கீகாரம் உண்டு. 10 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத இளைஞர்கள், “Ghotul” எனப்படும் மூங்கிலால் கட்டப்பட்ட குடில்களில் இரவு நேரங்களில் ஒன்று கூடுவர். இவை நவீன நகரங்களில் உள்ள “இரவு விடுதி” (night shelter) போன்று செயல்படுகின்றன. இங்கு இளம் ஆண்களும் பெண்களும் தங்கள் விருப்பப்படி இணைந்து உறவில் ஈடுபட அனுமதி பெறுகிறார்கள்.
இந்த நிகழ்வுகள் வருடாந்திர திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகின்றன. சில உறவுகள் ஒரு இரவுக்கே முடிவடையலாம்; சிலர் அந்த உறவின் வழியாக வாழ்நாள் துணையைத் தேர்ந்தெடுப்பதும் உண்டு. ஏழு நாட்கள் நீளும் விழா முடிவில், தங்கள் மனம் கவர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
பசுமை சூழலின் மத்தியில், இயற்கையோடு கலந்த இந்த சடங்கு, நவீன சமூகத்தில் அதிர்ச்சியாக தோன்றினாலும், முரியா மக்களுக்கு இது அவர்களது கலாச்சார அடையாளமும் ஒழுக்க நெறியும் ஆகும். அவர்களின் பார்வையில் இது, காதலுக்கும் விருப்பத்துக்கும் இடமளிக்கும் சமூக அமைப்பின் ஒரு பகுதியாகும்.



