“திருமணத்திற்கு எக்ஸ்பயரி தேதி இருக்க வேண்டும்; ரெனிவல் பண்ணவில்லையென்றால் கஷ்டப்படுவீர்கள்”!. நடிகை கஜோல்!

kajol

திருமணத்திற்கு காலாவதி தேதி இருக்க வேண்டும் என்ற நடிகை கஜோலின் பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வைரலாகி வருகிறது.


சமீபத்தில் ஹிந்தி டீவி ஷோவான “டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்” என்ற நிகழ்ச்சியில் நடிகை கஜோல் கலந்துகொண்டார். அந்த ஷோ ஒரு டாக் ஷோ. நிறைய பேசிக் கொண்டும் இருப்பார்கள். அதுவொரு விளையாட்டு போலவும் மாறும். அதில் முதல் ரவுண்டில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. , ​​திருமணத்திற்கு காலாவதி தேதி மற்றும் புதுப்பித்தல் விருப்பம் இருக்க வேண்டுமா என்று ட்விங்கிள் கன்னா கேட்டார். விருந்தினர்களான கிருதி சனோன் மற்றும் விக்கி கௌஷல் இல்லை என்று கூறினார், அதே நேரத்தில் கஜோல் அதற்கு ஆம் என்று பதிலளித்தார்.

கஜோல் கூறியதாவது,”எல்லா உறவும் சரியானது அல்ல என்று நான் நம்புகிறேன். சரியான நேரத்தில் சரியான நபரை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சரியான நேரத்தில் புதுப்பித்தால் உங்கள் வாழ்க்கை கஷ்டமானதாக இல்லாமல் சிறப்பாக இருக்கும் என்றார்.

நீங்கள் சரியான நேரத்தில் சரியான நபரை திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அந்த உறவைப் புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அதை துண்டிக்க வேண்டியிருக்கும். இந்த விஷயங்களை சரியான நேரத்தில் நீங்கள் செய்யாமல் விட்டால் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டி இருக்கும். இதை சரியாக செய்தால் இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்றார்.

பணம் தான் மகிழ்ச்சியை தருமா? திருமண வாழ்க்கை பற்றிய கேள்விக்கு பதிலளித்த பின் அடுத்ததாக கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா? பணத்தால் மகிழ்ச்சியை வாங்கிவிட முடியும். பணம் இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும் என்பது தான். அதற்கு மற்றவர்கள் ஆம் என்று சொல்ல, கஜோல் அதையும் மறுத்து இல்லை என்றார். அதற்கு விளக்கமும் தந்தார்.

பணம் மட்டுமே வாழ்க்கையில் சந்தோஷத்தை தராது. ஒருசில சமயங்களில் பணம் மட்டும் நிறைய இருக்கும். உங்களுக்கு பிடித்ததை எதுவுமே செய்ய முடியாமல் போகலாம். அது எப்படி மகிழ்ச்சியானதாக இருக்கும். பணம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவில் தான் மகிழ்ச்சியை தருமே தவிர பணத்தால் மட்டுமே மகிழ்ச்சியை வாங்க முடியாது என்றார்.

KOKILA

Next Post

ஷாக்!. இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டியது!. சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

Thu Nov 13 , 2025
நீரிழிவு நோய் என்பது உலகளவில் வேகமாகப் பரவி வரும் ஒரு தீவிர நோயாகும். இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியிருப்பதால் நிலைமை கவலையளிக்கிறது. வரும் தசாப்தங்களில் நீரிழிவு ஒரு பெரிய பிரச்சனையாக மாறக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நடுத்தர வயதில் நீரிழிவு நோய் மீண்டும் பரவலாக இருந்தது, ஆனால் இப்போது அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் கூட இப்போது நீரிழிவு நோயால் […]
diabetes

You May Like