“தனது திருமணம் குறித்து வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் 3 படம் மூலம் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் அனிருத். ஒய் திஸ் கொல வெறி பாடல் உலகப்புகழ்பெற்றதாக மாறிவிட்டது.. இளம் இசையமைப்பாளர்களில் அனிருத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கும் பிடித்துப்போகவும், தொடர்ந்து பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். இறுதியில், விஜய், அஜித், கமல் துவங்கி ரஜினி படங்களுக்கும் அனிருத் இசையமைத்து, புகழின் உச்சியையும் எட்டிவிட்டார். தற்போது 34 வயதாகும் அனிருத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம். அதேபோல அனிருத் குறித்து பல சர்ச்சைகள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை தந்துவிடும்..
அந்தவகையில், கடந்த சில நாட்களாக அனிருத் திருமணம் குறித்த வதந்திகள் பகிரப்பட்டு வருகிறது. ஐபிஎல் அணியான சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் – அனிருத் இருவரும் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் இதுதொடர்பான வதந்திகளுக்கு அனிருத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அவரது எக்ஸ் தளத்தில், அதில், ” கல்யாணமா? கொஞ்சம் சில் பண்ணுங்க, பொறுமையாக இருங்கள் நண்பர்களே. தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
Readmore: ஒரு செல்பி எடுப்போமா?. பொக்கிஷமாகும் புகைப்படங்கள்!. இன்று இயற்கை புகைப்பட தினம்!.