’சமந்தாவுக்கு எல்லா வலிமையும் கிடைக்க வேண்டும்’… நாக சைதன்யா வீட்டில் இருந்து வந்த வாழ்த்து…

மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமந்த வெளியிட்ட தகவலை அடுத்து முன்னாள் கணவர் நாக சைதன்யா வீட்டில் இருந்து சமந்தா குணம் பெற வாழ்த்து வந்துள்ளது.

பிரபல நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று சமூக வலைத்தலங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு விரைவில் பூரண குணம் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து கமண்ட் செய்தனர்.

மேலும், அவரது முன்னாள் கணவர் நாகசைதன்யா சமந்தாவுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் நாகசைதன்யாவிடம் இருந்து பதில் வரும் என காத்திருந்தபோது அவரது இளைய சகோதரர் அக்கினேனி அகில் டுவிட்டரில் சமந்தாவுக்கு பதில் அளித்துள்ளார்.

’டியர் சாம் நீங்கள் குணமாக உங்களுக்கு எல்லா அன்பும் வலிமையும் கிடைக்கும்’ என்று பதிவிட்டுள்ளார். நாக சைதனயாவுக்கு பதிலாக அவரது சகோதரர் அகில் அக்கினேனி ஆறுதல் கூறிய நிலையில் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அகில் பிறந்தநாளின் போது சமந்தா அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

டி.20 உலக கோப்பை : 134  என்ற இலக்கை முறியடித்து வென்றது தென்னாப்பிரிக்கா…!

Sun Oct 30 , 2022
டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில்137 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றியை தட்டிச் சென்றது. டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 49 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி. சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில்  133 ரன்கள் அடித்து 134 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் க்ரூப் […]

You May Like