தமிழ்நாடு அரசில் MBBS மருத்துவர் வேலைவாய்ப்பு.. ரூ.2,05,700 வரை சம்பளம்..! விண்ணப்பிக்க ரெடியா..?

doctors

தமிழ்நாடு அரசு மருத்துவர் பதவிக்கான பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பதவியின் பெயர்: உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்

காலிப்பணியிடங்கள்: 299

பணியிட விவரம்:

  • மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் – 182
  • ரேடியோலாஜி – 37
  • தடயவியல் மருத்துவம் – 50
  • முதியோர் மருத்துவம் – 10
  • கார்டியோடோராசிக் அறுவை சிகிச்சை – 20

வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 37 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 47 வரையும், முன்னாள் ராணுவத்தினருக்கு 48 வயது வரையும் இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, எம்பிசி, பிசி, பிசிஎம் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி:

* சிறப்பு பிரிவு உதவி அறுவை சிகிச்சை (பொது) மருத்துவர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், MBBS மருத்துவப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

* அந்தந்த சிறப்பு பிரிவில் MD / MS / DNB / டிப்ளமோ / DNB (டிப்ளமோ) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.

* 12 மாதங்களுக்கு குறைவாக இல்லாமல் ஹவுஸ் சர்ஜன் (CRRI) சேவையை நிறைவு செய்திருக்க வேண்டும்.

* தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் (TNMC) பதிவு செய்திருக்க வேண்டும்.

* சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்வி மற்றும் சிறப்பு பிரிவு தகுதிகள் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சம்பளம்: தமிழ்நாடு அரசின் மருத்துவர் பணியிடங்களுக்கு நிலை 22 கீழ் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் கணினி வழி (CBT) தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். இந்த தேர்வு கொள்குறி (Objective) முறையில் நடைபெறும்.

முக்கிய அம்சங்கள்:

  • நெகட்டிவ் மார்க் இல்லை
  • தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் கிடையாது
  • கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்
  • சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு பணி நியமனம் வழங்கப்படும்

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு https://mrb.tn.gov.in/ என்ற எம்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.01.2026.

Read more: காண்டம்களை மலிவான விலையில் வாங்க விரும்பும் பாகிஸ்தான்; ஆனால் நோ சொன்ன IMF..! ஏன் தெரியுமா?

English Summary

MBBS Doctor Recruitment in Tamil Nadu Government.. Salary up to Rs.2,05,700..! Ready to apply..?

Next Post

பற்றி எரியும் வங்கதேசம்..! ஊடக அலுவலகங்கள் தீ வைத்து எரிப்பு.. நகரங்களில் பெரும் பதற்றம்..! அங்கு என்ன நடக்கிறது?

Fri Dec 19 , 2025
Following the death of youth leader Sharif Usman Hadi on Thursday night, violent protests have erupted in several cities across Bangladesh.
bangaladesh protest 1

You May Like