மேற்கு வங்க மாநிலம் தனியார் மருத்துவ கல்லுாரியில் ஒடிஷாவின் ஜல்லேஸ்வரைச் சேர்ந்த மாணவி, இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார். இவர் நேற்றுமுன் தினம் தன்னுடைய ஆண் நண்பருடன் இரவு உணவருந்தி விட்டு, ஹாஸ்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 3 பேர், அந்த மாணவியின், செல்போனை பறித்ததுடன், 3,000 ரூபாய் தந்தால் போனை திரும்ப தருவதாக சொல்லி உள்ளனர்.
உடனே மாணவியின் நண்பன் பணத்தை எடுத்து வருவதாக கூறி ஓடினார்.. ஆனால் அதற்குள் அந்த மாணவியை வனப்பகுதிக்கு இழுத்து சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினர். தற்போது அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று தப்பியோடிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள். இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘குற்றவாளிகள் மாணவியின் கைப்பேசி மூலம் மற்றொரு கூட்டாளியை தொடா்புகொண்டு பேசி சம்பவ இடத்துக்கு வரவழைத்துள்ளனா். அந்த எண்ணைக் கொண்டு, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரின் கைப்பேசி எண்ணும் அடையாளம் காணப்பட்டது.
தனியாா் மருத்துவக் கல்லூரியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் காட்டுப் பகுதியில் ட்ரோன்கள் உதவியுடன் விரிவான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, மூன்று போ் கைது செய்யப்பட்டனா். இச்சம்பவத்தில் வேறு நபா்களுக்கு தொடா்புள்ளதா? கைதான மூவரும் மாணவி அல்லது அவரது நண்பருக்கு முன்பே பழக்கமானவா்களா? மாணவியின் நண்பருக்கு ஏதேனும் தொடா்புள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.
Read more: பக்கவாதம் வருவதை முன்பே எச்சரிக்கும் அறிகுறிகள்.. உஷாராகிட்டா தப்பிக்கலாம்…!



