கவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைத்த தர்ஷா குப்தாவின் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!!

கிறிஸ்துமஸ் தினமான இன்று, ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோயம்புத்தூரை சேர்ந்த மாடல் அழகியான நடிகை தர்ஷா குப்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இதுதவிர லாக்டவுன் சமயத்தில் சமூக வலைதளங்களில் வித விதமாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு தனக்கான ரசிகர் வட்டத்தை பெரிதாக்கினார். இதன்மூலம் இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தன. அந்த வகையில் திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் தர்ஷா.

கவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைத்த தர்ஷா குப்தாவின் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!!

இதையடுத்து, தற்போது சன்னி லியோன் கதையின் நாயகியாக நடித்துள்ள ’ஓ மை கோஸ்ட்’ என்கிற பேய் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் தர்ஷா. இப்படம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இவ்வாறு சினிமாவில் பிசியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், கிறிஸ்துமஸ் தினமான இன்று, ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கவர்ச்சியான உடை அணிந்து தர்ஷா குப்தா போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். தர்ஷாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

CHELLA

Next Post

கேரளாவில் பரவிய பறவைக்காய்ச்சல் – 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்து, கோழிகள் அழிப்பு

Sun Dec 25 , 2022
கேரள மாநிலம் கோட்டயத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து 5,000 வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டன. பறவைக் காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளுவன்சா என்பது ஒரு வைரஸ் தொற்று. இது முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது, அதோடு கூட மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட பறவையின் மலம், மூக்கு, வாய் அல்லது கண்களிலிருந்து சுரக்கும் திரவமானது கோழி அல்லது பறவைகளுடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கும் அவை பரவுகின்றன. ஆகவே இந்த பாதிக்கப்பட்ட கோழி மற்றும் முட்டைகளை […]
bird flu chicken a7050fb6 fe05 11e7 a1cf 7dff4aec86fa

You May Like