ரெடி…! டிசம்பர் 10-ம் தேதி முதல் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு…!

anbil mahesh

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 10-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 15-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான தேர்வு டிசம்பர் 15-ல் தொடங்கி 23-ம் தேதி வரை முடிவடையும். தேர்வுகள் காலை, மதியம் என வேளைகளில் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து அனைத்து வகுப்புகளுக்கும் டிசம்பர் 24 முதல் ஜனவரி. 4-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து மீண்டும் ஜனவரி 5-ல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பாகிஸ்தானில் பயங்கரம்!. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது தாக்குதல்!. பல ராணுவ வீரர்கள் பலி?. வெளியான அதிர்ச்சி தகவல்!.

Mon Nov 17 , 2025
குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தாக்கப்பட்டது. தாக்குதலுக்குப் பிறகு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. சிபி மாவட்டத்திற்கு அருகிலுள்ள நசிராபாத்தின் ரபி பகுதி வழியாக ரயில் சென்று கொண்டிருந்தபோது, ​​ரயில் பாதையில் ஒரு சக்திவாய்ந்த IED குண்டு வெடித்ததால், பல பெட்டிகள் தடம் புரண்டன. குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்ததாகவும், ரயில்வேக்கு குறிப்பிடத்தக்க இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்றார்கள்? ஜாஃபர் எக்ஸ்பிரஸ் […]
jaffar express attacked 1

You May Like