நேபாளத்தில் ராணுவ ஊரடங்கு அமல்! இந்திய எல்லையில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

nepal curfew

நேபாள அரசின் சமூக ஊடகத் தடை மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக நேற்று முன் அந்நாட்டு இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் சுமார் 20 பேர் இதில் உயிரிழந்தனர்.. 500 பேர் காயமடைந்தனர்.. திங்கள் கிழமை இரவே அரசு சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கினாலும், போராட்டம் நேற்றும் தீவிரமடைந்தது.


சமூக ஊடகங்கள் மீதான தடையால் கோபமடைந்த Gen Z போராட்டக்காரர்கள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளனர். நாட்டின் நாடாளுமன்றம், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தனிப்பட்ட வீடுகள் மற்றும் உச்ச நீதிமன்றம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மக்களின் போராட்டங்கள் வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்தன.

பொதுமக்களின் எதிர்ப்பால் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பல்வேறு துறைகளின் அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் நேபாள் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேலும் தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.

ஊழல் மற்றும் உறவினர்களுக்கு சலுகை அளித்தல் குற்றச்சாட்டுகளால் நேபாளத்தில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஆட்சி கவிழ்ந்தது.. இதையடுத்து அங்கு ராணுவ ஆட்சி அமலில் உள்ளது.. நேபாள இராணுவம் மின்சார இணைப்புகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டது. மேலும் நாட்டில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.. நேபாளத்தில் ராணுவ ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது..

நாடு முழுவதும் காலை முதல் மாலை 5 மணி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், வியாழக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. “போராட்டம் என்ற போர்வையில்” கொள்ளை, தீ வைப்பு மற்றும் பிற அழிவுகரமான செயல்களைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது..

நேபாளத்துடனான தனது எல்லையில் இந்தியா தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. “நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கருத்தில் கொண்டு, இந்தியா-நேபாள எல்லையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலையை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

நேபாளமும் இந்தியாவும் 1751 கிலோமீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன, இது உத்தரகண்ட், உத்தரபிரதேசம், பீகார், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியது.. இந்த மாநிலங்கள் அனைத்தும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியா நேபாளத்துடன் பகிர்ந்து கொள்ளும் 1,751 கிலோமீட்டர் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

Read More : உச்சக்கட்ட பதற்றம்.. நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிரான கதைகள்..? உஷார் நிலையில் இந்திய புலனாய்வு அமைப்புகள்..

RUPA

Next Post

“அண்டை நாடுகளில் என்ன நடக்குதுன்னு பாருங்க”: நேபாளத்தை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் சொன்ன கருத்து..

Wed Sep 10 , 2025
இந்த வாரம் நேபாளத்தில் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.. மாநிலங்களின் மசோதாக்களை நிறைவேற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் ஆளுநர்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ அல்லது எந்த வகையிலும் பொதுமக்களைப் பாதிக்கக்கூடியதாகவோ இருக்கும் எந்தவொரு சட்டப் புள்ளியிலும் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற […]
nepal gen z protest 103527210 16x9 1

You May Like