கரூரில் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். கரூர் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அமைச்சர் அன்பில் மகேஷ் கரூர் விரைந்தார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் பார்த்த அமைச்சர் அன்பில் மகேஷ் கதறி அழுத்தார். கதறி அழுத அமைச்சர் அன்பில் மகேஷை செந்தில் பாலாஜி ஆறுதல் கூறி தேற்றினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் ட்ரோல் செய்தனர். இதுதொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் பரவினர். இந்த நிலையில் எதிர்மறை விமர்சனங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் “தமிழ் முழக்கம்” மேடைப்பேச்சு – ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்க தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும்.
இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்கு சமமானது. அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றி இருந்தால் மரத்திற்கு சமமானது என வள்ளுவர் கூறியுள்ளார். முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு தன்னை மனிதனாக்க தெரியாமல் மறந்து விட்டான்” என கூறினார்.
Read more: புதன்-ராகு சேர்க்கை : இந்த 3 ராசிக்காரர்களின் பெரும் ஜாக்பாட்.. தலைவிதியே மாறும்..!



